Friday, 10 December 2021

Ventranarae Nam Yesu Paran வென்றனரே நம் இயேசு பரன்


 

வென்றனரே நம் இயேசு பரன்
என்றென்றும் ஜெயித்தெழுந்தார்
ஜெயமே அடைந்துமே
இரட்சகரில் வளருவோம்  வென்றனரே

1. சேதமேதும் நெருங்கிடா
தேவ தேவன் தாங்குவார்
துன்பம் யாவும் நீங்கிடும்
இன்பம் என்றும் தங்கிடும்வென்றனரே

2. தீங்கு நாளில் மறைத்துமே
சுகமாய் காத்து மூடுவார்
தகுந்த வேளை கரத்தினில்
உயர்த்தி ஜெயமே நல்குவார்வென்றனரே

3. தேவனோடு செல்லுவேன்
மதிலைத் தாண்டி பாயுவேன்
உலகை ஜெயிக்கும் தேவனால்
யாவும் ஜெயித்து செல்லுவேன்வென்றனரே

4. நீதிமானை உயர்த்துவார்
நீதிபரனாம் இயேசுவே
சத்துரு வீழ்ந்து அழிந்திட
தேவன் ஜெயமே தந்திடுவார்வென்றனரே


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.