Wednesday, 8 December 2021

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே


 

ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கி வா
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே – ஊற்றுத்

2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட – ஊற்றுத்

3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே
ஆத்ம பாரமும் பரிசுத்தமும்
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே –  ஊற்றுத்

4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமூகத்தில் ஜெயம் பெற்றிட – ஊற்றுத்

5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே
பரிசுத்தத்தை நான் பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே –ஊற்றுத்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.