Monday, 13 December 2021

Ummai Nambi Vanthaen உம்மை நம்பி வந்தேன்


 

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம் தயை என்னைக் கைவிடல

வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்

இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்

 

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே

உம்மைத் துதிப்பேன்

 

1. காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்

கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்

உடன்படிக்கை என்னோடு செய்து

இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்  – ஏல்

 

2. வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்

வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர்

பரதேசியாய் நான் தங்கினதை

சுதந்திரமாக மாற்றித் தந்தீர்  – ஏல்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.