Monday, 20 December 2021

Pesum Theivam Neer பேசும் தெய்வம் நீர்

பேசும் தெய்வம் நீர்

பேசாத கல்லோ மரமோ நீர் அல்ல

1.என்னைப் படைத்தவர் நீர்

என்னை வளர்த்தவர் நீர்

என் பாவம் நீக்கி என்னைக் குணமாக்கி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

2.என் பாரம் சுமப்பவர் நீர்

என் தாகம் தீர்ப்பவர் நீர்

என்னைப் போஷித்து என்னை உடுத்தி

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

3.என் குடும்ப வைத்தியர் நீர்

ஏற்ற நல் ஔஷதம் நீர்

எந்தன் வியாதி பெலவீனங்களில்

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

4.என்னை அழைத்தவர் நீர்

என்றும் நடத்திடுவீர்

என் மேல் கண் வைத்து ஆலோசனை தந்து

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

5.எனக்காய் வருபவர் நீர்

என் கண்ணீர் துடைப்பவர் நீர்

எல்லாம் முடித்து சீயோனில் சேர்த்து

என்னோடிருப்பவர் நீர் – இயேசுவே (4) – பேசும்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.