Thursday, 23 December 2021

Mannan Yesu Varukintraar மன்னன் இயேசு வருகின்றார்


 

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா ஆனந்தமே
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு

1. மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையானவர்அல்லேலூயா

2. பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதேஅல்லேலூயா

3. வெண்குதிரை மேல் உலாவ வருகின்றார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குது
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதுஅல்லேலூயா

 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.