Thursday, 18 November 2021

Jeevikirar Yesu Jeevikirar ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்


 

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்

1. செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

2. உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே


Tuesday, 16 November 2021

என் மீட்பர் சென்ற பாதையில்


 


1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா

சிலுவையை நான் விடேன் (2)
சிலுவையை சிலுவையை
நான் விடேன்

2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா

3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா

4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயா
கோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா

5. லோகத்தார் மாண்டு போகிறார்
மெய் வீரர் இல்லாமல்
பார் மீட்பர் ஜீவனை விட்டார்
தொங்கிச் சிலுவையில்

6. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேன்


Sunday, 14 November 2021

Anbe Anbe Anbe அன்பே அன்பே அன்பே


 


அன்பே அன்பே அன்பே
ஆருயிர் உறவே
ஆனந்தம் ஆனந்தமே

1. ஒரு நாளுந்தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா  என் மேல்
உம் தயை பெரிதையாஅன்பே

2. பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரில் அன்பேனையா
ஆழம் அறிவேனோ  அன்பின்
ஆழம் அறிவேனோஅன்பே

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே  எனையும்
அணைத்தீர் அன்பாலேஅன்பே

4. பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா  அன்பு
வாடாதே ஐயாஅன்பே

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் நான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோஅன்பே


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்


 


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

 

1. அற்புதமான அன்பே – என்னில்

பொற்பரன் பாராட்டும் தூய அன்பே

என்றும் மாறா தேவ அன்பே

என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

 

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே

தியாகமான தேவ அன்பே

திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

 

3. மாய உலக அன்பை – நம்பி

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே

என்னை வென்ற தேவ அன்பே

என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

 

4. ஆதரவான அன்பே – நித்தம்

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே

உன்னதமான  தேவ அன்பே

உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

 

5. வாக்கு மாறாத அன்பே – திரு

வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே

சர்வ வல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்


Friday, 12 November 2021

Thuthiye Thuthiye Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே


 


துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே

1. தூதகணங்கள் தூயவருந்தன்
பாத சேவை செய்து பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் – துதியே

2. அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர் – துதியே

3. பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்  – துதியே

4. அந்தகாரமதின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் – துதியே

5. மீட்கப்பட்டவர் ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர் – துதியே

6. கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி தேவனே
துத்தியம் செய்திடுவோம் – துதியே


ஜாதிகளே எல்லோரும்


 ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே

கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே


1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட

ஈந்தளித்தீர் உந்தன் கிருபை

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே


2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்

சேதமின்றி என்னைக் காத்தாரே

ஜீவியப் பாதையில் தேவை தந்து

ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே


3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி

சாவு பயம் யாவும் போக்கினார்

சோதனை வேதனை சூழ்கையில்

சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே


4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்

சொந்த பிள்ளையாக மாற்றினார்

நாடியே வந்தென்னை ஆதரித்து

வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே


5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்

வானவரின் வாக்கு மாறாதே

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

Wednesday, 10 November 2021

Mahilnthu Kalikkum மகிழ்ந்து களிக்கும்


 


1. மகிழ்ந்து களிக்கும் வனாந்தரம்

மலர்ந்து செழிக்கும் வறண்டநிலம்

ஜொலித்து பூரிக்கும் அலங்காரம்

கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்தும்

 

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி

தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்தி

திடன் கொள்ளுவோம் பயம் நீக்குவோம்

நம் மீட்பின் தேவன் வருகின்றார்  

 

2. இருண்ட கண்கள் ஒளிபெறுமே

செவிடர் செவிகள் திறந்திடுமே

முடவன் மான்போல் குதித்திடுவான்

ஊமையன் நாவு பாடிடுமே

 

3. இராஜபாதை இது என்றே

தூயபாதை இது நன்றே

பாதகர் அங்கு நடப்பதில்லை

பேதையர் வழிகெட்டுப் போவதில்லை

 

4. மீட்கப்பட்டோர் கெம்பீரமாய்

ஆனந்தக் களிப்புடனே வருவார்

சஞ்சலம் தவிப்பும் அங்கே இல்லை

சந்தோஷம் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை