1.
மகிழ்ந்து களிக்கும் வனாந்தரம்
மலர்ந்து
செழிக்கும் வறண்டநிலம்
ஜொலித்து
பூரிக்கும் அலங்காரம்
கர்த்தரின்
மகிமையை வெளிப்படுத்தும்
தளர்ந்த
கைகளைத் திடப்படுத்தி
தள்ளாடும்
முழங்காலைப் பெலப்படுத்தி
திடன்
கொள்ளுவோம் பயம் நீக்குவோம்
நம்
மீட்பின் தேவன் வருகின்றார்
2.
இருண்ட கண்கள் ஒளிபெறுமே
செவிடர்
செவிகள் திறந்திடுமே
முடவன்
மான்போல் குதித்திடுவான்
ஊமையன்
நாவு பாடிடுமே
3.
இராஜபாதை இது என்றே
தூயபாதை
இது நன்றே
பாதகர்
அங்கு நடப்பதில்லை
பேதையர்
வழிகெட்டுப் போவதில்லை
4.
மீட்கப்பட்டோர் கெம்பீரமாய்
ஆனந்தக்
களிப்புடனே வருவார்
சஞ்சலம்
தவிப்பும் அங்கே இல்லை
சந்தோஷம்
மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.