Friday, 12 November 2021

ஜாதிகளே எல்லோரும்


 ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே

கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே


1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட

ஈந்தளித்தீர் உந்தன் கிருபை

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே


2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்

சேதமின்றி என்னைக் காத்தாரே

ஜீவியப் பாதையில் தேவை தந்து

ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே


3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி

சாவு பயம் யாவும் போக்கினார்

சோதனை வேதனை சூழ்கையில்

சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே


4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்

சொந்த பிள்ளையாக மாற்றினார்

நாடியே வந்தென்னை ஆதரித்து

வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே


5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்

வானவரின் வாக்கு மாறாதே

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.