Tuesday, 23 November 2021

En Yesuvae Ummai Allal என் இயேசுவே உம்மை அல்லால்


 

என் இயேசுவே உம்மை அல்லால்
மண்ணில் ஆறுதல்
ஒன்றும் கண்டிலேன்

1. சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
இன்பம் தரும் பொருள் காணேன்
தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
லோகம் வேறொன்றும் நல்காதே

2. ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
துணையும் நீர் பெலனுமே நாதா
ஆகையால் பூமி நிலை மாறினாலும்
அஞ்சேன் கடல் பொங்கினாலும்

3. பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
பரனே உம் கிருபையின் நிழலில்
பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

4. என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
பரதேச  யாத்திரை செய்வேன்
பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
பாரங்கள் ஏதும் நானறியேன்

5. உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
உலகின் வினைகள் மறப்பேன்
உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
பெருகும் என் இதயத்தின் இன்பம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.