Sunday, 24 October 2021

Paaduvaen Paravasamaguvaen பாடுவேன் பரவசமாகுவேன்


 


பாடுவேன் பரவசமாகுவேன்

பறந்தோடும் இன்னலே


1.அலையலையாய் துன்பம் சூழ்ந்து

நிலை கலங்கி ஆழ்த்தையில்

அலைகடல் தடுத்து நடுவழி விடுத்து

கடத்தியே சென்ற கர்த்தனை --- பாடுவேன்


2.என்று மாறும் எந்தன் துயரம்

என்றே மனமும் ஏங்கையில்

மாராவின் கசப்பை மதுரமுமாக்கி

மகிழ்வித்த மகிபனையே  --- பாடுவேன்


3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்

உதவுவாரற்றுப் போகையில்

கன்மலை பிளந்து தண்ணீரை சுரந்து

தாகம்  தீர்த்த தயவை  --- பாடுவேன்


4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி

பட்டினி சஞ்சலம் நேர்கையில்

வான மன்னாவால் ஞானமாய் போஷித்த

காணாத மன்னா இயேசுவை --- பாடுவேன்


5. எண்ணிறந்த எதிர்ப்பினூடே

ஏளனமும் சேர்ந்து தாக்கையில்

துன்ப பெருக்கிலும் இன்முகம் காட்டி

ஜெயகீதம் ஈந்தவரை --- பாடுவேன்


Saturday, 23 October 2021

Umakkaga Thanae Iyya உமக்காகத்தானே ஐயா


 

உமக்காகத் தானே -ஐயா நான்
உயிர் வாழ்கிறேன்ஐயா
இந்த உடலும் உள்ளமெல்லாம் அன்பர்
உமக்காகத்தானே ஐயா

1. கோதுமை மணிபோல் மடிந்திடுவேன்
உமக்காய் தினமும் பலன் கொடுப்பேன்
அவமானம் நிந்தை சிலுவைதனை
அனுதினம் உமக்காய் சுமக்கின்றேன்

2. எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் கணிக்கவில்லை
எல்லாருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

3. எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மனநிறைவோடு பணி செய்வேன்

4. எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயலெல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக

5. பண்படுத்தும் உம் சித்தம்போல
பயன்படுத்தும் உம் விருப்பம்போல
உம்கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே


Friday, 22 October 2021

Vetri Venthan Yesu வெற்றி வேந்தன் இயேசு


 


வெற்றி வேந்தன் இயேசு வருகின்றார் 

நாம் வாழ்த்தி வரவேற்கிறோம்

விண் தூதசேனை பரன் இயேசு பக்தர்கள்

வானில் ஓன்று சேரும் நாளிதோ

 

1. ஏழை எளிய அவதாரம் எடுத்து

ஏசு நம் இதயத்தைக் கவர்ந்தாரல்லோ

மனத் தூய்மை விரும்பிடும் மனிதரையே

தனக்காக தெரிந்தேசு அழைத்தாரல்லோ --- வெற்றி

 

2. எக்காலமும் நான் மறவேன் தேவன்பை

என்னதான் இதற்கீடு நான் செய்வேனோ

உள்ளம் நன்றி நிறைந்தே நான் துதி பாடியே

உயிருள்ள கிறிஸ்தே நான் உம்மை சேவிப்பேன் --- வெற்றி

 

3. வந்தாரே புவியில் மரித்தாரே பலியாய்

வேதம் நிறைவேற உயிர்த்தாரல்லோ

இனி காலம் செல்லாது எதிநோக்குவோம்

இவர் மேசியா மீண்டும் வருகின்றாரே --- வெற்றி

 

4. சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா

சாந்த சொரூபி சர்வ வல்லவர்

செங்கோலும் யூதாவில் துளிர்க்கின்றதே

சமாதான பிரபுவே நீர் வாரும் தேவா   --- வெற்றி

 

5. எந்தை என் இயேசு வருவார் என்றெண்ண

சிந்தை மனம் யாவும் களிகூருதே

விந்தையாய் அவர் சாயல் அடைந்தேகுவேன்

பந்தய பொருள் நாடி பறந்தே செல்வேன் --- வெற்றி


Thursday, 21 October 2021

Iniyum Ummodu Kitti இனியும் உம்மோடு கிட்டி


 


இனியும் உம்மோடு கிட்டி சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆற்றி கிருபை அளித்திடுமே

1. பெலவீனன் என் அருகில்
பெலம் தாரும் வந்தெனக்காய்
உம்மைப் போல் நான் கனி தரவே
உமதாவியால் நிறைத்திடுமே

2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து  வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே


Wednesday, 20 October 2021

Leviarae Aasariyarae லேவியரே ஆசாரியரே


 

லேவியரே ஆசாரியரே

ஆனந்தமாய் நாம் கூடி வந்தோமே

இயேசுவின் பாதத்தில் பரவசமாய்

பாரத மீட்புக்காய் கிருபை பெறுவோம்   - லேவியரே

 

1. எட்டுத் திசைக்கும் இயேசு புகழ் பரவ

நித்திய சுவிசேஷம் ஏந்திச் செல்லுவோம்

சாத்தானின் கட்டுகளை அறுத்திடுவோம்

சத்திய சபை கட்டி எழுப்பிடுவோம்    - லேவியரே

 

2. விசுவாச வீரர்களாய் எழும்பிடுவோம்

வெளிப்பாடு வரங்களை உபயோகிப்போம்

பாதாளக் கட்டுகளை அறுத்திடுவோம்

பரலோக பலன்களை சேர்த்துக்குவிப்போம்   - லேவியரே

 

3. நம்பிக்கை நங்கூரமாய் நடந்திடுவோம்

தாழ்மையின் ரூபங்களால் வளர்ந்திடுவோம்

பாவத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்

காரிய சமர்த்தர்களாய் நின்றிடுவோம்   - லேவியரே

 

4. ஜெபத்தின் ஜெயங்களாய் முன் செல்லுவோம்

தியான ஊற்றுகளில் தூது பெறுவோம்

மாமிசத்தின் கட்டுகளை அறுத்திடுவோம்

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கர்த்தரைக் காண்போம்  - லேவியரே

 

5. பேச்சின் தூதர்களாய் பறந்திடுவோம்

நடக்கையின் நகல்களாய் விரைந்திடுவோம்

சமுதாயக் கட்டுகளை அறுத்திடுவோம்

நன்மையின் வாசல்களாய் விழித்திடுவோம்   - லேவியரே

 

6. இயேசுவின் காயங்களின் கனிகளே நாம்

களிகூர்ந்து மகிழ்ந்து ஆடிப்பாடுவோம்

அப்போஸ்தல ஊழியத்தில் ஆர்ப்பரிப்போம்

ஆசீர்வாத மழைக்கு மேகங்களாவோம்   - லேவியரே

Monday, 18 October 2021

Ulagathil Iruppavanilum உலகத்தில் இருப்பவனிலும்



 



உலகத்தில் இருப்பவனிலும்
உங்களில் இருப்பவர் பெரியவர்
கர்த்தர் பெரியவர் நல்லவர்
வல்லவர் என்றுமே

1. தண்ணீரைக் கடந்திடும் போதும்
உன்மேல் அவைகள் புரளுவதில்லை
அக்கினியின் சோதனை ஒன்றும் செய்யாதே
அவைகளை மிதித்து ஜெயமே அடைவாய்

2. உன் பக்கம் ஆயிரம் பேரும்
உன் மேல் விழுந்தும் தீங்கொன்றுமில்லை
கண்களினால் காணுவாய் தேவன் துணை உனக்கே
ஜெயதொனியோடே முன்னே செல்வாய்

3. என்றென்றும் கர்த்தரின் நாமம்
துணையே என்று அறிந்துணர்வாயே
உனக்கெதிராய் எழும்பிடும் ஒன்றும் வாய்க்காதே
சேனையின் தேவன் ஜெயமே அளிப்பார்

4. எந்நாளும் இயேசுவை நம்பு
குறைவேயில்லை ஜீவியமதிலே
பசுமையின் ஜீவியம் உந்தன் பங்காகும்
கர்த்தரின் ஆசீர் உனக்கே சொந்தம்








Sunday, 17 October 2021

Karthathi Karthanai கர்த்தாதி கரத்தனை


 


கர்த்தாதி கரத்தனை
இராஜாதி இராஜனை
நான் கெம்பீரித்து பாடுவேன்
நான் கெம்பீரித்து பாடுவேன்

ஆடுவேன் பாடுவேன் மகிழ்ந்திடுவேன்  
அன்பரின் பாதத்தில் அமர்ந்திடுவேன்  --- கர்த்தாதி
 

1. எனக்காக யாவற்றையும்
செய்து முடிப்பார் அவர்
கர்த்தரைத் தேடிடுவேன் என்றும்
எனக்கொன்றும் குறைவில்லையே  --- ஆடுவேன்

2. கர்த்தரை நம்பிடுவேன்
சகலமும் நன்மையாகும்
வாக்குதத்தம் செய்தவர் அவர்
வாக்கொன்றும் மாறிடாரே --- ஆடுவேன்

3. கோழி தன் குஞ்சுகளை
கூட்டி அணைப்பது போல்
சேதம் வராமல் என்னை
அவர் செட்டையில் காத்திடுவார் --- ஆடுவேன்

4. அழுகையின் பள்ளத்தாக்கை
நீரூற்றாய் மாற்றிடுவார்
திறந்த வாசல் ஒன்றை அவர்
எனக்காக வைத்திடுவார் --- ஆடுவேன்