Tuesday 16 February 2021

Nam Deva Sannithanathil நாம் தேவ சந்நிதானத்தில்


 Nam Deva Sannithanathil

1.நாம் தேவ சந்நிதானத்தில் மகா மகிழ்ச்சியாக வந்தாதி கர்த்தரண்டையில் வணக்கஞ் செய்வோமாக யெகோவாவுக்கு நிகர் யார் யாவும் நன்றாகச் செய்கிறார் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 2. கர்த்தாதி கர்த்தர் ஞானத்தால் யாவற்றையும் நன்றாகப் படைத்துத் திட்டம் செய்ததால் மகா வணக்கமாக விண் மண் கடல் ஆகாயமும் விடாமல் துதி செலுத்தும் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 3.மேலான அற்புதங்களைச் செய்தென்னைப் பூரிப்பாக்கி என் மேல் விழுந்த பாரத்தை இரக்கமாய் விலக்கி ரட்சித்த மா தயாபரர் துதிக்கு என்றும் பாத்திரர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி 4.மெய் மார்க்கத்தாரே கர்த்தரைத் துதித்துக் கொண்டிருங்கள் அவர் சிறந்த நாமத்தை எந்நேரமும் தொழுங்கள் அவர் எல்லாம் படைத்தவர் கர்த்தாதி கர்த்தரானவர் கர்த்தாவுக்கே புகழ்ச்சி

Thursday 11 February 2021

Pareer Arunothayam Pol பாரீர் அருணோதயம் போல்


 Pareer Arunothayam Pol

1. பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமுமாம் பதினாயிரங்களில் சிறந்தோர் (2) 2. காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே 3. அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என் மேல் பறந்த கொடி நேசமே – இயேசுவே 4. என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் – இயேசுவே 5. என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே – இயேசுவே

Sunday 7 February 2021

Um Arul Pera Yesuve உம் அருள் பெற இயேசுவே


 


Um Arul Pera Yesuve 1. உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன் என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். 2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. 3. ஆனாலும் வாரும் தயவாய் மா நேச ரட்சகா என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய் என் பாவ நாசகா. 4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன் நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். 5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர் மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். 6. என் பக்தி ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன் உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன். 7. என் ஆவி தேகம் செல்வமும் நான் தத்தம் செய்கிறேன் ஆ இயேசுவே சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்.

Monday 1 February 2021

Kartharilum Tham Vallamaiyilum கர்த்தரிலும் தம் வல்லமையிலும்


 Kartharilum Tham Vallamaiyilum

1. கர்த்தரிலும் தம் வல்லமையிலும் கிருபையால் யாவரும் பலப்படுவோம் தீங்கு நாளிலே சாத்தானை எதிர்த்து நின்று திராணியுடன் போர் புரிவோம் சர்வாயுத வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் சாத்தானின் சேனையை முறித்திடுவோம் – அவர் சத்துவ வல்லமையால் 2. மாமிசம் இரத்தத்துடனுமல்ல துரைத்தனம் அதிகாரம் அந்தகாரத்தின் லோகாதிபதியோடும் பொல்லா ஆவியோடும் போராட்டம் நமக்கு உண்டு – சர்வாயுத 3. சத்தியமாம் கச்சையை கட்டியே நீதியின் மார்க்கவசம் தரித்தே சமாதானத்தின் சுவிசேஷ பாதரட்சை நாம் கால்களில் தொடுத்துக்கொள்வோம் – சர்வாயுத 4. பொல்லாங்கன் எய்யும் அம்புகளை வல்லமையோடும் எதிர்க்கும் ஆயுதம் விசுவாசம் என்னும் கேடகம் மேலே வீரமுடன் பிடித்து நிற்போம் – சர்வாயுத 5. இரட்சண்யமாம் தலைச்சீராவும் எச்சனமும் அணிந்துகொள்வோம் தேவ வசனமென்னும் ஆவியின் பட்டயம் தேவை அதைப்பிடித்துக்கொள்வோம் – சர்வாயுத 5. எந்தச் சமயத்திலும் சகல வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் பரிசுத்தர்கட்காக ஆவியினால் மனஉறுதியுடன் ஜெபிப்போம் – சர்வாயுத

Sunday 31 January 2021

Search Me O God


 1. Search me O God my actions try

And let my life appear As seen by thine all searching eye To mine my ways make clear. 2. Search all my sense and know my heart Who only canst make known And let the deep the hidden part To me be fully shown. 3. Throw light into the darkened cells Where passion reigns within Quicken my conscience till it feels The loathsomeness of sin 4. Search all my thoughts the secret springs The motives that control The chambers where polluted things Hold empire over the soul. 5. Search till Thy fiery glance has cast Its holy light through all And I by grace am brought at last Before Thy face to fall 6. Thus prostrate I shall learn of Thee What now I feebly prove That God alone in Christ can be Unutterable love

Arainthu Paarum Karthare ஆராய்ந்து பாரும் கர்த்தரே


 Arainthu Paarum Karthare

1. ஆராய்ந்து பாரும் கர்த்தரே என் செய்கை யாவையும் நீர் காணுமாறு காணவே என்னில் பிரகாசியும் 2. ஆராயும் என்தன் உள்ளத்தை நீர் சோதித்தறிவீர் என் அந்தரங்க பாவத்தை மா தெளிவாக்குவீர் 3. ஆராயும் சுடரொளியால் தூராசை தோன்றவும் மெய் மனஸ்தாபம் அதனால் உண்டாக்கியருளும் 4. ஆராயும் சிந்தை யோசனை எவ்வகை நோக்கமும் அசுத்த மனோபாவனை உள்ளிந்திரியங்களும் 5. ஆராயும் மறைவிடத்தை உம் தூயக் கண்ணினால் அரோசிப்பேன் என் பாவத்தை உம் பேரருளினால் 6. இவ்வாறு நீர் ஆராய்கையில் சாஷ்டாங்கம் பண்ணுவேன் உம் சரணார விந்தத்தில் பணிந்து போற்றுவேன்

Saturday 30 January 2021

Naan Paadum Kanangalal நான் பாடும் கானங்களால்


 Naan Paadum Kanangalal

நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் என் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியாம் என்னை மீட்டெடுத்தீர் — நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்