Kalai Velaiyile Nam Nathanai
காலை வேளையிலே நம் நாதனை போற்றிடுவோம் (2)
துதி மாலையுடன் புகழ் பாடியே (2)
அவர் பாதம் வீழ்ந்து பணிவோம் மகிழ்வோம்
1. காலை தோறும் புது கிருபையினால்
நிறைத்திடும் தேவனை வாழ்த்திடுவோம்
குறைகள் யாவும் குருசினில் ஏற்ற (2)
திருமைந்தன் இயேசுவை வணங்கிடுவோம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
2. பாவத்தை உணர்த்தும் தினம் வழி நடத்தும்
ஆவியாம் தேவனை துதித்திடுவோம்
மூன்றில் ஒன்றாய் அருள் ஒளி சுடராய் (2)
திகழ்ந்திடும் திரியேகரை நமஸ்கரிப்போம் (2)
சரணம் சரணம் சரணம் (2) --- காலை வேளையிலே
Athikalai Neram Aandavar Samoogam
அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்
1. வடதிசை வாழும் என் குடும்பம்
என் நினைவில் என்றும் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார் (2)
2. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் (2)
3. தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமுகத்தை சீக்கிரம் வசப்படுத்தும் (2)
Kalai Neram Inba Jeba Thiyaname
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
கருணை பொற்பாதம் காத்திருப்பேன்
அதிகாலையில் அறிவை உணர்த்தி
அன்போடு இயேசு தினம் பேசுவார்
1. எஜமான் என் இயேசு முகம் தேடுவேன்
என் கண் கர்த்தாவின் கரம் நோக்குமே
எனக்கு ஒத்தாசை அவரால் கிடைக்கும்
என்னை அழைத்தார் அவர் சேவைக்கே
2. பலர் தீமை நிந்தை மொழிகள் உன் மேல்
பொய்யாய் சொன்னாலும் களிகூருவாய்
இதுவே உன் பாக்யம் என இயேசு சொன்னார்
இந்த மெய் வாக்கு நிறைவேறுதே
3. சிலுவை சுமந்தே அனுதினமே
சோராமல் என் பின் வா என்றாரே
அவரோடு பாடு சகித்தாளுவேனே
ஆண்டாண்டு காலம் ஜெயமாகவே
4. பறந்து புறா போல் சிறகடித்தே
பாடிச் சென்றோர் நாள் இளைப்பாறுவேன்
பரலோக வாசல் பரம சீயோனே
பூரித்து என்னை வரவேற்குமே