O Enthan Ullam
1. ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்என் வாழ்க்கையில்எல்லாம் நிறைந்திருப்பதால்உம்மைத் துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்இன்றும் என்றும் உம்மைபோற்றி பாடித் துதிப்பேன்2.கண்மணி போல காத்துக் கொள்வதால்உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்3. பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்4. ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
Kalvari Snegam
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும் (2)
கும்பிடுவோரை குணமாக்கும் வேதம்
2. இருண்டதோர் வாழ்வில் இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
நாதா உம் சிநேகம் பெருகட்டும் என்னில் (2)
என்னை காணுவோர் உம்மை காணட்டும்
3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நான் சிறுகவும் நீர் பெருகவும் (2)
தீபத்தின் திரியாய் எடுத்தாட்கொள்ளும்
Siluvai Oar Punitha Sinnam
சிலுவை ஓர் புனிதச் சின்னம்
ஜெகத்து ரட்சகன்
இயேசு மரித்துயிர்த்தெழுந்தார் – சிலுவை
1.கல்வாரியில் முளைத்து
ககனம் வரை தழைத்து
எல்லாத்திக்கும் கிளைத்து
இகபரத்தை இணைத்து
இல்லாரைச் செல்வராக்கும்
பொல்லாரை நல்லோராக்கும்
நல்லாயன் இயேசு சுவாமி
தோளில் சுமந்து சென்ற --- சிலுவை
2.அலகை சிரமுடைக்க
அகந்தை நினைவழிக்க
பலமயல்களகற்றப் பவக்
கடலைக் கடக்க
உலகில் உயிர்களோங்க
உன்னத வாழ்வு பெற
பலகுல மனிதரும்
பகைத்துப்பின் போற்றுகின்ற --- சிலுவை
3.யூதர்க்கிடறலான
இயேசு நாதர் சிலுவை
கிரேக்க ஞானியருக்கு
பைத்தியமச் சிலுவை
அன்பர்க் கடைக்கலமும்
தேவ பெலனும் சிலுவை
தன்னை உணர்ந்தவர்
தனிப்பெருமை சிலுவை - சிலுவை