Kalvariyin Karunaiyithe
1. கல்வாரியின் கருணையிதேகாயங்களில் காணுதேகர்த்தன் இயேசு பார் உனக்காய்கஷ்டங்கள் சகித்தாரேவிலையேறப் பெற்ற திருரத்தமே -அவர்விலாவினின்று பாயுதேவிலையேறப் பெற்றோனாய்உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே2. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோஇவ்வன்புக் கிணையாகுமோஅன்னையிலும் அன்பு வைத்தேதம் ஜீவனை ஈந்தாரே3. சிந்தையிலே பாரங்களும்நிந்தைகள் ஏற்றவராய்தொங்குகின்றார் பாதகன் போல்மங்கா வாழ்வளிக்கவே4. எந்தனுக்காய் கல்வாரியில்இந்தப் பாடுகள் பட்டீர்தந்தையே உம் அன்பினையேசிந்தித்தே சேவை செய்வேன்5. மனுஷனை நீர் நினைக்கவும்அவனை விசாரிக்கவும்மண்ணில் அவன் எம்மாத்திரம்மன்னவா உம் தயவே
Siluvaiyil Araiyunda Yesuve
1. சிலுவையில் அறையுண்ட இயேசுவேஉம்மையே நோக்கி பார்க்கிறேன் என் பாவ சுமைகளோடு உம் பாத நிழலில் நிற்கிறேன் இயேசுவே உமது இரத்தத்தால் என்னை கழுவி இன்றே உம்முடன் வான்வீட்டில் என்னையும் சேருமே 2. தந்தையே இவர்களை மன்னியும் அறியாமல் செய்தார்கள் என்றீர் மாறாத இரக்கத்தால் என்னை மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே --- இயேசுவே 3. அம்மா இதோ உன் மகன் என்றீர்இதோ உன் தாய் என்றே நேசத்தால் அன்னையின் அன்பினில் நாளுமே என்னையும் வாழ்ந்திட செய்யுமே ---இயேசுவே 4. தாகமாய் உள்ளதே இறைவா ஏன் என்னை கை விட்டீர் என்றீரே கைவிடா நேசத்தால் எனக்கும் தாகம் மாற்றும் ஜீவநீரை தாருமே --- இயேசுவே 5. தந்தையே உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன் என்னையும் உமது கரத்தில் முற்றிலும் கையளிக்கின்றேன் --- இயேசுவே