Koodi Meetper Namathil
1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ இன்ப, இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் — ஆ இன்ப
3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் — ஆ இன்ப
4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் — ஆ இன்ப
Kaaviyam Padiduven
காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே
இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்
1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் (2)--- காவியம்
2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்
Enthan Vanjai Paralogame
எந்தன் வாஞ்சை பரலோகமே
என்று சேர்ந்திடுவேன்
என் நேசரை என் ராஜனை
என்று நான் கண்டிடுவேன்
1. நேசர் தேசமதில்
என்றும் பேரின்பமே
கண்ணீரெல்லாம் மாறிடுமே
என்றும் ஆனந்தமே --- எந்தன்
2. சாவின் கூர்மை யாவும்
அழிந்து ஒழிந்ததே
சஞ்சலமோ அங்கில்லையே
நேசரை கண்டிடுவேன் --- எந்தன்
3. வீதி பொன் மயமே
பாடியே மகிழுவேன்
இராப்பகலோ அங்கில்லையே
வெளிச்சம் இயேசு தானே --- எந்தன்
4. ஜீவ தண்ணீரினால்
தாகம் தீர்த்திடுவார்
உள்ளமெல்லாம் ஏங்கிடுதே
என்று சேர்ந்திடுவேன் --- எந்தன்
5. தேவ அன்பதுவே
நெருக்கி ஏவிடுதே
பிரிக்கவோ ஏதுமில்லை
அன்பரை சேர்ந்திடுவேன் --- எந்தன்
Deva Sabaiyile Devan Eluntharulinar
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்
பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார்
1.பயத்தோடே நல் பக்தியோடே
தேவனை ஆராதிப்போம்
வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் --- தேவ
2.ஆபத்து நாளில் அரணாம் கோட்டை
நித்திய கன்மலையே
யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே --- தேவ
3.இராப்பகலாய் தன் கண்மணிபோல்
தூங்காது காப்பவரே
தாயினும் மேலாக தாங்கி ஆதரிப்பார் --- தேவ
4.உலகின் முடிவு வரைக்கும் நான்
உன்னோடிருப்பேன் என்றாரே
அல்பா ஓமேகா என்னும் நாமத்தோரிவர் --- தேவ
5.சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய
ஏகமாய் துதித்திடுவோம்
சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே --- தேவ
6.ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்
உன்னத தேவனையே
ஜே ஜெய ராஜனுக்கு ஜெயம் மூழங்கிடுவோம் --- தேவ