Tuesday, 17 December 2019

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர

Aa Ambara Umbara ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு ஆதிபன் பிறந்தார் ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ 1. அன்பான பரனே அருள் மேவுங் காரணனே – நவ அச்சய சச்சிதா – ரட்சகனாகிய உச்சிதவரனே – ஆ 2. ஆதம் பாவமற, நீதம் நிறைவேற – அன்று அல்லிராவினில் வெல்லையடியினில் புல்லணையிற் பிறந்தார் – ஆ 3. ஞானியர் தேட வானவர் பாட – மிக நன்னய உன்னத – பன்னரு மேசையா இந்நிலம் பிறந்தார் – ஆ 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட – என்று கோத்திரர் தோத்திரஞ் – சாற்றிடவே யூத கோத்திரன் பிறந்தார் – ஆ 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண – ஏரோது மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட விந்தையாய்ப் பிறந்தார் – ஆ

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு

Samathanam Oothum சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம் 1. நமதாதி பிதாவின் திருப் பாலரிவர் அனுகூலரிவர் மனுவேலரிவர் --- சமாதானம் 2. நேய கிருபையின் ஓரு சேயர் இவர் பரம ராயர் இவர் நம தாயரிவர் --- சமாதானம் 3. ஆதி நரர் செய்த தீதறவே அருளானந்தமாய் அடியார் சொந்தமாய் --- சமாதானம் 4. ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே அறிஞோர் தேடவே இடையோர் கூடவே --- சமாதானம் 5. மெய்யாகவே மே சையாவுமே நம்மை நாடினாரே கிருபை கூறினாரே --- சமாதானம் 6. அருளானந்த மோட்ச வழி காட்டினாரே நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே --- சமாதானம்

Monday, 16 December 2019

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

Vana Thoothar Senaigal வான தூதர் சேனைகள் கீதங்களைப் பாடியே ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினாரே 1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில் தோன்றினர் தூதர்கள் அட்சணமே அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம் நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏந்திடுவோம் சென்றனர் பாலனை தரிசிக்கவே வான் நட்சத்திரத்தின் ஒளியிலே மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர் 3. ஏவையின் சாபத்தை நீக்கிடவே மானிடர் ரூபமாய் ஜென்மித்தார் பாவிகளை மீட்டு ரட்சிக்கவே மனுக்குமாரன் வந்துதித்தார் சேர்ந்து நாமும் சென்றங்கு காண்போம் நம் பாலனை - வானதூதர்

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ

Arasanai Kanamalirupomo அரசனைக் காணமலிருப்போமோ - நமது ஆயுளை வீணாகக் கழிப்போமோ பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர் பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல் ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத் திசை வழி காட்டிமுன் செல்லுது பார் பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை 3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன் அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார் இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம் எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை 4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம் வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர் பொற்கழல் அர்ச்சனை புரிவோமே வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும்

Aanantha Geethangal Ennalum ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் 1.புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த 2.மகிமை தேவன் மகத்துவ ராஜன் அடிமை ரூபம் தரித்திக லோகம் தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த 3.மனதின் பாரம் யாவையும் நீக்கி மரண பயமும் புறம்பே தள்ளி மா சமாதானம் மா தேவ அன்பும் மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த 4.அருமை இயேசுவின் திரு நாமம் இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும் கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும் வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த 5.கருணை பொங்க திருவருள் தங்க கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த

Sunday, 15 December 2019

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே

Chinnanjiru Suthane சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே மன்னர் மன்னவனே உன்னதத் திருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு கூடுண்டு பறவைகட்கு பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே வீடுண்டோ உந்தனுக்கு தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க தாரகம் நீரானீரோ கோரவன் பகைகள் பாரச்சுமைகள் தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு 2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு உன்னதர் நீரல்லவோ துன்பம் துடைக்க பண்பினைக் காக்க என்னருள் நீரல்லவோ பாசமாய் வந்தே காசினை மீட்ட நேசமுள்ள ஏசுவே நீச சிலுவை தொங்கப் பிறந்த தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு

Thursday, 12 December 2019

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

Aathuma Kartharai Thuthikintrathe ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ 1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை அனைவரும் பாக்கிய மென்பாரே முடிவில்லா மகிமை செய்தாரே – பல முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ – ஆத்துமா 2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர் பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ – ஆத்துமா 3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த முனியாபி ராமுட ஜனமதன்பால் நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன் நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ – ஆத்துமா