Arasanai Kanamalirupomo
அரசனைக் காணமலிருப்போமோ - நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ - யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ - யூத
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, - இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே - யூத --- அரசனை
2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார் - மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே - யூத --- அரசனை
3. அலங்காரமனை யொன்று தோணுது பார் - அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்- நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் - யூத --- அரசனை
4. அரமனையில் அவரைக் காணோமே! - அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, - பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார் - யூத --- அரசனை
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, - ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், - தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், - யூத --- அரசனை
Aanantha Geethangal Ennalum
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
1.புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த
2.மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திக லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த
3.மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த
4.அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த
5.கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த
Bethalehem Oororam
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம்
2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம்
3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம்
4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி
மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம்
5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு
அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்