Aanantha Geethangal Ennalum
ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்
1.புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே --- ஆனந்த
2.மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திக லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே --- ஆனந்த
3.மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே --- ஆனந்த
4.அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே --- ஆனந்த
5.கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் --- ஆனந்த
Bethalehem Oororam
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம்
2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம்
3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம்
4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி
மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம்
5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு
அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்