VIDEO
Chinnanjiru Suthane
சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமே
மன்னர் மன்னவனே உன்னதத் திருவே
1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டு
கூடுண்டு பறவைகட்கு
பாடுண்டு உமக்கு மனிதகுமாரனே
வீடுண்டோ உந்தனுக்கு
தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்க
தாரகம் நீரானீரோ
கோரவன் பகைகள் பாரச்சுமைகள்
தீர மருந்தானீரோ ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு
2. அன்பின் தாய் தந்தை எல்லாம் எனக்கு
உன்னதர் நீரல்லவோ
துன்பம் துடைக்க பண்பினைக் காக்க
என்னருள் நீரல்லவோ
பாசமாய் வந்தே காசினை மீட்ட
நேசமுள்ள ஏசுவே
நீச சிலுவை தொங்கப் பிறந்த
தாசரின் தாபரமே ஆ.. ஆ.. ஆ ம் ம் ம் --- சின்னஞ்சிறு
VIDEO
Aathuma Kartharai Thuthikintrathe
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே – என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே – இதோ
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே – பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே – இதோ – ஆத்துமா
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் – இதோ – ஆத்துமா
3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் – அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் – இதோ – ஆத்துமா
VIDEO
Bethalaiyil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்
5. இவ்வளாவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்
VIDEO
Bethalehem Oororam
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம்
2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம்
3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம்
4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி
மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம்
5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு
அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்
VIDEO
Aar Ivar Aaraaro
ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
பாலகனார்
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே – இருந்த – பரப்பொருள் தானிவரோ
சீருடன் புவி, வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த
மாவலரோ
2. மேசியா இவர் தானோ – நம்மை – மேய்த்திடும் நரர் கோனோ
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
மனசானோ
3. தித்திக்குந் தீங்கனியோ – நமது தேவனின் கண்மணியோ
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண்
ணொளியோ
4. பட்டத்துத் துரை மகனோ – நம்மைப் – பண்புடன் ஆள்பவனோ
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
தாயகனோ
5. ஜீவனின் அப்பமோதான் – தாகம் தீர்த்திடும்பானமோ தான்
ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கல மானவரி
வர்தானோ
VIDEO
Panivilum Ravinil
பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில்
விண்ணவர் வாழ்த்திட
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே
ராஜன் பிறந்தார் (2)
நேசர் பிறந்தாரே (2)
1.மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே
முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி
2.மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி
VIDEO
Thuthiyungal Devanai
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை - 2
1. அவரது அதிசயங்களை பாடி (2)
அவர் நாமத்தை பாராட்டி
அவரை ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள்
ஆப்ரகாமின் தேவனை
ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்
2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை (2)
இடையூற்றினை போக்கினோனே
கானானின் தேசத்தை காட்டினோனே
கர்த்தரை போற்றுங்கள்
ராஜாதி ராஜனை
கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்