Bethalehem Oororam
1.பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி ஓடி --- பெத்தலகேம்
2.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் நேரம் --- பெத்தலகேம்
3.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான்வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தைவாடின புல் பூண்டோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ பாடோ --- பெத்தலகேம்
4.அந்தரத்தில் பாடுகின்றார்தூதர் சேனை கூடி
மந்தை ஆயர்ஓடுகின்றார் பாடல்கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி மோடி --- பெத்தலகேம்
5.ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர்மகிமை கண்டு
அட்டியின்றிகாபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் இரட்சகரை கண்டு கண்டு --- பெத்தலகேம்
Thinam Thinam Nam Devanaiye
தினம் தினம் நம் தேவனையே
மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2)
1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே
மறவாமல் நம்மை காப்பவரே (2)
சிறந்த நாமம் உடையவரே
அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம்
2.அன்பின் உருவம் உடையவரே
ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2)
ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே
அன்னையை போல அணைப்பவரே (2) - தினம்
3.விண்ணில் மகிமை உடையவரே
மண்ணில் சமதானம் தருபவரே (2)
என்னில் தினமும் வாழ்பவரே
உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்