Thursday, 26 September 2019

Singara Maligaiyil Jeyageethangal சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள்

Singara Maligaiyil Jeyageethangal
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன் (2)
                    சரணங்கள்
ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் – அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

1. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம் – சிங்கார

2. முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் – அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார் – சிங்கார

3. பூமியின் அரசை புதுபாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம் – சிங்கார

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கிறதே – அவர்
வரும்வேளை யறியாதிருப்பதால் எப்போதும்
ஆயத்தமாயிருப்போம் – சிங்கார

Marithor Evarum uyirtheluvar மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்

Marithor Evarum uyirtheluvar
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.
             
                  அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால்.
                சரணங்கள்

1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க.

2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே.

3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய்.

Pilavunda Malaiye பிளவுண்ட மலையே

Pilavunda Malaiye
1. பிளவுண்ட மலையே புகலிடம் தாருமே,
பக்கம் பட்ட காயமும் பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும் நீக்கும்படி அருளும்.

2. எந்தக் கிரியை செய்துமே உந்தன் நீதி கிட்டாதே,
கண்ணீர் நித்தம் சொரிந்தும் கஷ்ட தவம் புரிந்தும்
பாவம் நீங்க மாட்டாதே நீரே மீட்பர் இயேசுவே.

3. யாதுமற்ற ஏழை நான், நாதியற்ற நீசன் தான்,
உம் சிலுவை தஞ்சமே, உந்தன் நீதி ஆடையே
தூய ஊற்றை அண்டினேன் தூய்மையாக்கேல் மாளுவேன்.

4. நிழல் போன்ற வாழ்விலே கண்ணை மூடும் சாவிலே
கண்ணுக்கெட்டா லோகத்தில், நடுத்தீர்வை தினத்தில்,
பிளவுண்ட மலையே, புகலிடம் ஈயுமே.

Wednesday, 25 September 2019

Malaigalin Naduve Veelnthidum மலைகளின் நடுவே வீழ்ந்திடும்

Malaigalin Naduve Veelnthidum
1.மலைகளின் நடுவே வீழ்ந்திடும் அருவிகள்
கண்களை கவர்ந்திடுதே
வாழ்க்கையின் நடுவே இயேசுவின் அன்பு
அருவியாய் பாய்ந்திடுதே
குரங்குகள் பறவைகள் அருவியின் சத்தம்
செவிகளில் ஒலித்திடுதே
கூக்குரல் நடுவே அன்பரின் குரலும்
உள்ளத்தில் தொனித்திடுதே
         
          நான் கண்ட இன்ப வாழ்வு
          யேசுவால் அடைந்த வாழ்வு
          கல்வாரி அன்பால் பாவங்கள் தீர்ந்த
          நீடிய சுக வாழ்வு
ஆ ஹா  ஹா  ஹா  ஹா  ஹா
ஓ  ஹோ  ஹோ  ஹோ  ஹோ  ஹோ
லா  லா  லா  லா  லா  லா
ம்  ம்  ம்  ம்  ம் 

2. அடுக்கடுக்கான மலைகளின் மீது 
மேகங்கள் தவழ்ந்திடுதே
மிடுக்கான பாவங்கள் உணர்ந்திட  என்னை
தூயவன் தொடுகின்றாரே
கடின பாறைகளில் தோன்றிய மரங்கள்
ஓங்கி   வளர்ந்திடுதே
கடின என் உள்ளத்தில் எழுந்திடும் தீர்மானம்
யேசுவால் உயர்ந்திடுதே  --- நான் கண்ட

3. கன்மலை கசிந்து சிந்திடும் தண்ணீர்
அருவியாய் பெருகிடுதே
கன்மலை இயேசு சிந்திய ரத்தம்
என் பாவம் கழுவிடுதே
சிகரங்கள் பின்னே மறைந்திடும் சூரியன்
தெளிவாக தெரிகிறதே
நீதியின் சூரியன் இயேசு நடு வானில்
விரைவினில் தோன்றிடுவார் --- நான் கண்ட

4. வானத்தில் மிதந்திடும் விண்ணொளி தீபங்கள்
இரவிற்கு அழகு தரும்
வானவர் இயேசுவின் திருமறை வசனங்கள்
உள்ளத்தில் ஒளியை தரும்
கடலின் அலைகள் சீறி எழுந்து
தாமாக அடங்கி விடும்
கடவுளின் பிள்ளையின் வாழ்வினில் புயல்கள்
 எளிதினில் ஒடுங்கி விடும்  -- நான் கண்ட

Yesukiristhu Intha Pooviluthithar இயேசுக்கிறிஸ்து இந்தப் பூவிலுதித்தார்

Yesukiristhu Intha Pooviluthithar
1.இயேசுக்கிறிஸ்து  இந்தப் பூவிலுதித்தார் 
அவர் நாமத்தைப் புகழ்ந்திடுவோம்
இந்தப் பார் முழுதும் மாந்தர் பாவங்களை
அவர் நீக்கிடப்  பிறந்தனரே
         
           விண்மீனின் ஒளி வழி  காட்டிடவே
           அவர் பாதத்தைப் பணியச் செல்வோம் 

2. ஆயர்கள் ஆடுகளைக்  காத்து நின்றிட
தேவ தூதர்கள் தோன்றி நின்றார்
அவர் உள்ளம் எல்லாம் இன்பம் பொங்கிடவே
நல்ல செய்தியை அறிவித்தனர்  --- விண்மீனின்

3. பெத்லகேம் நகருக்கு விரைந்தேகுவோம்
இயேசு பாலனை வணங்கிடுவோம்
நம் உள்ளந்தனை  அவர் துயிலிடமாய்
என்றும் மாற்றியே மகிழ்ந்திடுவோம்  --- விண்மீனின்

4. தூதர்கள் துதி செய்து தொழுது நின்றார்
இயேசு நாதனில் நிறைந்து நின்றார்
இந்தப் பார் முழுதும் இயேசு நாமம் எங்கும்
எந்நாளுமே  வளர்ந்திடவே  --- விண்மீனின்

En Aaththuma Nesar Yesuvai என் ஆத்தும நேசர் இயேசுவை

En Aaththuma Nesar Yesuvai
என் ஆத்தும நேசர் இயேசுவை
நான் அண்டிக்கொள்வேனே  (4)

1. நிலையில்லா என்னை கண்டிட் டார்
நித்திய  வழிக்குள்  நடத்திட்டார்
விலையில்லா இரத்தம் சிந்தினார்
விந்தையாய்  என்னைச் சந்தித்தார்
         
          பரகதி வாழ்வைத்  தந்தவர் பரமன் இயேசு கர்த்தரே
          நித்திய  வழிக்குள்  நடத்தியவர் நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்
          அல்லேலுயா  அல்லேலுயா அல்லேலுயா  அல்லேலுயா   --- என்

2.  பாவத்தை கழுவி பரிகரித்தார்
 சாபத்தை நீக்கி சங்கரித்தார்
லாபம் இன்றேல்  ஜீவனே
தாபம் எனக்கினி அவர்தானே  --- பரகதி

3. என்னையே மீட்க என் இயேசு
தன்னையே  தியாகம் செய்தாரே
அன்னையாய் அப்பனாய் ஆனவர்
உன்னையும் அன்பாய் அழைக்கின்றார்  --- பரகதி

Valvinile Oli Veesida Vanavar வாழ்வினிலே ஒளி வீசிட வானவர்

Valvinile Oli Veesida Vanavar
1.வாழ்வினிலே  ஒளி வீசிட வானவர் பிறந்தனரே
வாழ்க்கையிலே இருள் அகல தூயவன்  உதித்தனரே
 ஆதித் தந்தை ஆதாம் ஏவாள் பாவம் போக்கிடவே
ஜோதித்  திரு தேவபாலன்  ஜோதியாய் அவதரித்தார்

கன்னியின் பாலனாய் முன்னணையில் நிலமிதில்  பிறந்தனரே
போற்றிடுவோம்  போற்றிடுவோம் இறைவனைப்  போற்றிடுவோம்

2. அன்னாளும் சிமியோனும் ஆர்வமாய் சென்றேகி
பொன்னான பாலனையே கண்டு மகிழ்ந்தனரே
விண்ணோரும் மண்ணோரும் புகழ்ந்து சாற்றிடவே
விண்ணின் மணி புல்லணையில் அழகுடன் தவழ்ந்தாரே

3. ஏதேனெனும்  தோட்டத்திலே ஏவையால்  வந்த வினை
எந்நாளும் ஓங்காமலே அன்றலன் அகற்றிடவே
பூதலத்தில்  புண்ணியமாய் கிருபைகள் செய்திடவே
பூவுலகில் புனிதமான ஆசிகள் அளித்திடுவோம்

4. மாடடையும் கொட்டிலிதில் மானிடன் தோன்றினாரே
கேடுகளை நீக்கிடவே காவலன் உதித்தனரே
பாவிகளாம்  மாந்தர்களை பரிசுத்தமாக்கிடவே
பாவிகளின் நேசர் அவர் பாரினில் அவதரித்தார்