Vaan Pugal Valla Devanaiye Nitham
வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்
2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்
3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்
4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்
5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
வழுவ விடாமலே காத்திடும் தேவன்
மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்
6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.