Wednesday, 12 June 2019

Jothi Thontrum Oor Desamundu ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

Jothi Thontrum Oor Desamundu


1. ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்

இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்

2. அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் – இன்பராய்

3. நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் – இன்பராய்

4. அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் – இன்பராய்

5. சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் – இன்பராய்

6. அங்கே நம் ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் – இன்பராய்

7. தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் – இன்பராய்

8. என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயின் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் – இன்பராய்

9. ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார் – இன்பராய்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.