Tholugirom Engal Pithave
தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்
வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்
கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்
அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்
பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்
பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.