Thursday, 13 June 2019

Kathiravan Thontrum கதிரவன் தோன்றும்



Kathiravan Thontrum

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1. வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே – கதிரவன்

2. காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் – கதிரவன்

3. கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் – கதிரவன்

4. எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே – கதிரவன்

5. காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் – கதிரவன்

6. வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் – கதிரவன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.