Monday, 10 June 2019

Paava Naasar Patta Kaayam பாவ நாசர் பட்ட காயம்

Paava Naasar Patta Kaayam

1. பாவ நாசர் பட்ட காயம்
நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம்,
ஆறுதலும் உள்ளது.

2. ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று;
தெய்வ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று.

3. ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்;
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்.

4. பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி
துக்கத்தால் கலங்குவேன்;
அவர் சாவால் துக்கம் மாறி
சாகா ஜீவன் அடைவேன்.

5. சிலுவையை நோக்கி நிற்க,
உமதருள் உணர்வேன்;
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட,
சமாதானம் பெறுவேன்.

6. அவர் சிலுவை அடியில்
நிற்பதே மா பாக்கியம்;
சோர்ந்த திரு முகத்தினில்
காண்பேன் திவ்விய உருக்கம்.

7. உம்மை நான் கண்ணாரக் காண
விண்ணில் சேரும் அளவும்,
உம்மை ஓயா தியானம் செய்ய
என்னை ஏவியருளும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.