Saturday, 1 June 2019

Thuthi Sei Manamae Nitham துதி செய் மனமே நிதம்


Thuthi Sei Manamae Nitham
துதி செய் மனமே நிதம் துதி செய்
துதி செய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை
இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே

1. முன்காலமெல்லாம் உன்னை தம் கரமதில் ஏந்தி
வேண்டிய நன்மைகள் யாவும் உகந்தளித்தாரே

2. ஏகிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்த போது
ஏசுபரன் உன் காவலனாய் இருந்தாரே

3. சோதனை பலவாய் மேகம் போல் உனை சூழ்ந்தாலும்
சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை

4. தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும்
தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே

5. சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன்
சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.