Thursday, 31 December 2020

Senaigalin Karthar Nallavare சேனைகளின் கர்த்தர் நல்லவரே


 Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மை காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம் 1. வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் ஏசு நம்மோடங்கு நடக்கின்றார் 2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன் 3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் 4. ஏசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்

Wednesday, 30 December 2020

En Meiparai Yesu என் மேய்ப்பராய் இயேசு


 En Meiparai Yesu

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 1. என்னை அவர் பசும்புல் பூமியிலே எந்நேரமும் நடத்திடும் போதினிலே என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா என்றென்றும் இன்பமல்லவா 2. தம் பாதையில் என்னை நடத்திடவே என் கரத்தை பிடித்தே முன் நடப்பார் அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே 3. என்னோடவர் நடந்திடும் போதினிலே எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா 4. என்னையவர் அன்பால் நிரப்பியதால் எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால் என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா எந்நாளும் புகழ்ந்திடுமே 5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள என்னை என்றும் போதித்து நடத்துகின்றார் என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் 6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய் என்னையவர் ஆயத்தமாக்கினார் என்னானந்தம் ஆஹா என்னானந்தம் எனக்கென்றும் பேரானந்தமே

Tuesday, 29 December 2020

Athi Maram Pol Ethanai அத்திமரம் போல் எத்தனை


 Athi Maram Pol Ethanai

அத்திமரம் போல் எத்தனை பேர்கள் வாழுகிறார்கள் தினம் அர்த்தமில்லாமல் கர்த்தர் இல்லாமல் வாழுகிறார்கள் 1. பார்க்க பார்க்க அழகாய் இருந்தது அத்திமரம் இயேசு ஆசையோடு க‌னியைத் தேடினார் ஏமாற்ற‌ம் இப்ப‌டித்தானே ம‌னித‌ர்க‌ள் வாழும் வாழ்க்கை ப‌ல‌ வேஷ‌ம் 2. ஊருக்குள்ளே உத்த‌ம‌ர் போல ந‌டிப்பார்க‌ள் ஆனால் உண்மையிலே அத்தி ம‌ர‌ம் போல் இருப்பார்க‌ள் பேசுவ‌தெல்லாம் வேத‌ங்க‌ள் போடுவ‌தெல்லாம் வேஷ‌ங்க‌ள் 3. ஊருக்கு எல்லாம் உபதேசங்கள் செய்தாலும் வெறும் புகழுக்காக தான தர்மம் செய்தாலும் அன்பு அதிலே இல்லையென்றால் வாழ்ந்து என்ன லாபம் தான் 4. ம‌னித‌னை ம‌ட்டும் ந‌ம்புவ‌தாலே ப‌ய‌னில்லை ஆனால் இறைவ‌னை ம‌ட்டும் ந‌ம்பிடுவாய் துன்ப‌மில்லை க‌வ‌லைக‌ள் எல்லாம் போக்கிடுவார் க‌ண்ணீர் எல்லாம் துடைத்திடுவார்

Sunday, 27 December 2020

Yesuvai Pol Alagullore இயேசுவைப் போல் அழகுள்ளோர்


 Yesuvai Pol Alagullore

1. இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில் இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் வெறும் 2. சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் --- பூரண 3. எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய் உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் --- பூரண 4. லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால் பாவ சோதனைகளெல்லாம் என்னை சோதித்தால் --- பூரண 5. நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால் --- பூரண 6. தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே --- பூரண

As With Gladness Men Of Old


 1. As with gladness men of old

did the guiding star behold as with joy they hailed its light leading onward beaming bright so most gracious God may we evermore be led to thee 2. As with joyful steps they sped Saviour to thy lowly bed there to bend the knee before thee whom heaven and earth adore so may we with willing feet ever seek thy mercy seat 3. As they offered gifts most rare at thy cradle rude and bare so may we with holy joy pure and free from sin’s alloy all our costliest treasures bring Christ to thee our heavenly king 4. Holy Jesus every day keep us in the narrow way and when earthly things are past bring our ransomed souls at last where they need no star to guide where no clouds thy glory hide 5. In the heavenly city bright none shall need created light Thou its light its joy its crown Thou its sun which goes not down There for ever may we sing alleluias to our king.

Saturday, 26 December 2020

En Idhayam Yaarukku Theriyum என் இதயம் யாருக்கு தெரியும்


 En Idhayam Yaarukku Theriyum

என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் (2) 1. நெஞ்சின் நோவுகள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே (2) – என் 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ (2) – என் 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ (2) – என் 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே (2) – என்

Thursday, 24 December 2020

Perinba Nathiye பேரின்ப நதியே


 Perinba Nathiye

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப