Thursday, 15 October 2020
viduthalai viduthalai விடுதலை விடுதலை
viduthalai viduthalaiவிடுதலை விடுதலை விடுதலை பெற்றேன் வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தில் தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை (2) 1. தடுக்கும் பாவத் தளைகளில் விடுதலை கெடுக்கும் தீய பழக்கத்தில் விடுதலை என்ன சந்தோஷம் இந்த விடுதலை (2) எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் (2) – விடு 2. எரிக்கும் கோபப் பிடியினில் விடுதலை விதைக்கும் தீய பொறாமையில் விடுதலை அன்பர் இயேசுவே தந்த விடுதலை (2) இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே விடுதலை (2) – விடு 3. அடுக்காய் பேசும் பொய்யினில் விடுதலை மிடுக்காய் வீசும் பெருமையில் விடுதலை ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே (2) தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் விடுதலை (2) – விடு 4. மாறிட்ட எந்தன் உள்ளத்தில் விடுதலை மாறிடா அன்பர் அடிமையாய் மாற்றிடுதே என்ன சந்தோஷம் இந்த அடிமைக்கு (2) மீட்கும் அன்பை ருசித்திடவே ஆவலில்லையே (2) – விடு
Sunday, 4 October 2020
Unthan Sitham Pola Ennai உந்தன் சித்தம் போல என்னை
Unthan Sitham Pola Ennaiஉந்தன் சித்தம் போல என்னை ஒவ்வொரு நாளும் நடத்தும் எந்தன் சித்தம் போல அல்ல என் பிதாவே என் தேவனே 1. இன்பமுள்ள ஜீவியமோ அதிக செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான் 2. நேர் வழியோ நிரப்பானதோ நீண்டதுவோ குறுகியதோ பாரம் சுமந்தோடுவதோ பாரில் பாக்கியமானதுவே 3. அந்தகாரமோ பயமோ அப்பனே பிரகாசமோ எந்த நிலை நீரளிப்பீர் எல்லாம் எனக் காசீர்வாதம் 4. ஏது நலமென்றறிய இல்லை ஞானம் என்னில் நாதா தீதிலா நாமம் நிமித்தம் நீதி வழியில் திருப்பி 5. அக்கினி மேக ஸ்தம்பங்களில் அடியேனை என்றும் நடத்தி அனுதினமும் கூட இருந்து அப்பனே ஆசீர்வதிப்பீர்
Saturday, 3 October 2020
Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க
Anbil Ennai Parisuthanaaka1. அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க உம்மைக் கொண்டு சகலத்தையும் உருவாக்கியே நீர் முதற்பேரானீரோ தந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோ எம்மாத்திரம் மண்ணான நான் இன்னும் நன்றியுடன் துதிப்பேன் 2. மரித்தோரில் முதல் எழுந்ததினால் புது சிருஷ்டியின் தலையானீரே சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை --- என் 3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே முதற்பேராய் நீர் இருக்க ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே உம் சாயலில் நான் வளர --- என் 4. வருங்காலங்களில் முதற்பேராய் நீர் இருக்க நாம் சோதரராய் உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி ஆளுவோம் புது சிருஷ்டியிலே --- என் 5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே நான் இதற்கென்ன பதில் செய்குவேன் உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட என்னை தந்தேன் நடத்திடுமே --- என்
Monday, 21 September 2020
Desame Payapadathe தேசமே பயப்படாதே
Desame Payapadatheதேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு மன்னவர் இயேசு உந்தனுக்கே மாபெரும் காரியம் செய்திடுவார் 1. செழிப்பான புதுவாழ்வு தேவனே அருளிடுவார் சுகவாழ்வு சமாதானம் சந்தோஷம் தந்திடுவார் - தேசமே 2. மலைபோல வருவதெல்லாம் பனிப் போல் மறைந்திடுமே உன்னதரின் கிருபைகளும் உந்தனைச் சூழ்ந்திடுமே - தேசமே 3. தேவனுடன் உறவு கொண்டு தினம் தினம் வாழ்ந்திடுவாய் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தை ருசித்திடுவாய் - தேசமே
Tuesday, 15 September 2020
Mahilnthiduven Naan Kartharukul மகிழ்ந்திடுவேன் நான் கர்த்தருக்குள்
Sunday, 13 September 2020
Iratchippai Uyarthi Solvom இரட்சிப்பை உயர்த்தி சொல்வோம்
Wednesday, 9 September 2020
Sarvathaiyum Anbai சர்வத்தையும் அன்பாய்
Subscribe to:
Posts (Atom)