Aathumave Sthothiri
ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்
Pitha Anbu Selvan
பிதா அன்புச் செல்வன் பூமியிலே வான் பிறை ஒளி முன்னணை புரண்டதே தாழ்மையுள்ள இதயத்திலே தனயன் தவழ்கிறான் அவன் தரணி மீள ஆருயிரைத் தானம் தருகிறான் --- பிதா 1. ஒளி பூச் சொரியும் இதயத்திலே நடப்பான் அருள் ஓடி வரும் கடமைகளில் வளர்வான் இருள் ஒளிந்தோட சுடர் ஒளியாய் ஒளிர்வான் வழி ஒற்றுமையில் அறக்கடலாய் நிலைப்பான் --- தாழ்மை 2. கனி கடலாக ஆவியினால் தருவான் பகை கலைந்தோட அமுதமொழி அருள்வான் பிறர் கனிந்துயர உடலாவி கொடுப்பான் மனம் கசிந்துருக கோடி துயர் சுமப்பான் --- தாழ்மை 3. கடல் உப்பாக வாழ்ந்துவிடில் இன்பம் பிறர் கண்டு வர ஒளிப்பாதை எழும்பும் விழி தூண்டும் பணி அமைதியுன் சிரிப்பு அதில் துலங்க வரும் தூயோனின் ரட்சிப்பு --- தாழ்மை 4. புவி புல்லரெல்லாம் மாற்றி விடும் புனிதன் வளர் புது மலராய் பூத்த தெய்வ மனிதன் உளம் பூம்பொழிலாய் மாற்ற வந்த கோமான் தேன் பூங்குயிலாய் அறம் பாடும் பூமான் --- தாழ்மை
Paduvom Paduvom Intru
1. பாடுவோம் பாடுவோம் இன்று பாடி மகிழ்வோம்
பாலனாம் இயேசு இன்று பிறந்தார்
இந்தப் பாருலகில் இன்று அவதரித்தார்
என்று பாடியே மகிழ்ந்திடுவோம்
ஆ மகிழ்ந்திடுவோம் இன்று பாடிடுவோம்
இயேசு பாலகன் இன்று பிறந்தார்
இந்த ஆயர்களின் வாழ்த்து உரைத்திடவே
இந்தப் பூவுலகில் உதித்தார்
2. பொன் வெள்ளைப் போளம் தூப வர்க்கத்தோடு
மூவர் வந்து பணிந்தனரே
இயேசு பாதமதில் தம் சிரசை வைத்து
தம்மைத் தாழ்த்தி வணங்கினரே --- ஆ
3. இயேசு நமக்காகவே இவ்வுலகில் வந்தார்
இந்தப் பூமியை மீட்டிடவே
இன்று உள்ளமதில் அவர் பிறந்து விட்டார்
என்று பாடியே மகிழ்ந்திடுவோம் --- ஆ
Jathigale Ellorum Kartharai
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்
தேவன் அளித்த நன்மை பெரியதே
கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே
1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட
ஈந்தளித்தீர் உந்தன் கிருபை
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்
சேதமின்றி என்னைக் காத்தாரே
ஜீவியப் பாதையில் தேவை தந்து
ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே
3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி
சாவு பயம் யாவும் போக்கினார்
சோதனை வேதனை சூழ்கையில்
சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே
4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்
சொந்த பிள்ளையாக மாற்றினார்
நாடியே வந்தென்னை ஆதரித்து
வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே
5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்
வானவரின் வாக்கு மாறாதே
நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்
சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே