Wednesday, 29 January 2020

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthipaen கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் – நான் 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார் --- கர்த்தரையே 2. எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்--- கர்த்தரையே 3. எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார்--- கர்த்தரையே 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவு பாவம் என்னை அணுக முடியாது --- கர்த்தரையே 5.வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன் --- கர்த்தரையே 6.வீடு கட்டுவோர் புறக்கணித்தது மூலைக் கல்லாயிற்று கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் ஆச்சரியம் இது --- கர்த்தரையே

Tuesday, 28 January 2020

Potruvom Devanai போற்றுவோம் தேவனை

Potruvom Devanai போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய் (2) ஆவியுடன் உண்மையுடன் ஆராதிப்போம் இயேசுவை 1. சென்ற நாளினில் சுகமுடன் காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம் (2) தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே என்றும் சொந்தமாய் 2. தேவ ஜனத்தின் ஆகாரமாம் மன்னா புசித்து ஜீவித்தாரே (2) என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில் என்றும் வளருவோம் 3. தேவ கிருபை தங்கிடவே தேவ தேவனை ஆராதிப்போம் (2) உள்ளம் நொறுங்கியே உண்மை மனதுடன் என்றும் தொழுகுவோம் 4. தேவ ஆலயம் மகிமையால் நிரம்பி தங்கிட ஆராதிப்போம் (2) துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே சாற்றி ஆராதிப்போம்

Avar Arputhamanavare அவர் அற்புதமானவரே

Avar Arputhamanavare 1. அவர் அற்புதமானவரே – 2 எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார் அவர் அற்புதமானவரே 2. அவர் உன்னதர் என்றனரே – 2 விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள் அவர் உன்னதர் என்றனரே – அவர் 3. அவர் அற்புதமானவரே – 2 அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே அவர் அற்புதமானவரே – அவர் 4. அவர் உன்னதர் என்றனரே – 2 அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே அவர் உன்னதர் என்றனரே – அவர்

Wednesday, 22 January 2020

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே

Aayiram Varuda Arasatchiyae ஆயிரம் வருட அரசாட்சியே பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே பரமபிதா வேதவாக்கிதே பசுமை பொற்காலம் வருகின்றதே --- ஆயிரம் 1. பசுவும் கரடியும் கூடி மேயுமே புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும் ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும் ஒரு சிறு பையனே நடத்திடுவான் --- ஆயிரம் 2. இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும் குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில் களங்கம் பயமின்றி விளையாடுமே --- ஆயிரம் 3. வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே விருட்சங்கள் இனிய கனி தருமே அமைதியும் நிலவும் சுகவாழ்வு துளிர்க்கும் அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே --- ஆயிரம் 4. கிறிஸ்தேசு ராஜா புவியாளுவார் கிடைக்கும் நல்நீதி எளியவர்க்கே பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள் பரனோடு நீடுழி அரசாளவே --- ஆயிரம்

Sunday, 19 January 2020

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப் பாடி

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனைத் துதித்துப் பாடி அவர் நாமம் போற்றுவோம் களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம் துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம் அவர் நாமம் போற்றுவோம் 1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார் அவர் நாமம் போற்றுவோம் துன் மார்க்க வாழ்வை முற்றும் நீக்கி அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 2. மெய் ஜீவ பாதைதனில் சென்று அவர் நாமம் போற்றுவோம் நல் ஆவியின் கனிகள் ஈந்து அவர் நாமம் போற்றுவோம் – களி கூர் 3. மேலோக தூதர் கீதம் பாடி அவர் நாமம் போற்றுவோம் பேரின்ப நாடுதனில் வாழ அவர் நாமம் போற்றுவோம் – களி கூர்

En Nenjame Nee Motchathai என் நெஞ்சமே நீ மோட்சத்தை

En Nenjame Nee Motchathai 1.என் நெஞ்சமே நீ மோட்சத்தை விரும்பித் தேடி கர்த்தரை வணக்கத்துடனே துதித்துப் பாடி, என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன் வெம் காந்தி வீசும் சூரியன் ஆகாச சேனைகள், மின், மேகம், காற்று மாரியே வானங்களின் வானங்களே ஒன்றாகப் பாடுங்கள். 3. விஸ்தாரமான பூமியே நீயும் எழுந்து வாழ்த்தல் செய் யெகோவா நல்லவர் சராசரங்கள் அனைத்தும் அவர் சொற்படி நடக்கும் அவரே ஆண்டவர். 4. பரத்திலுள்ள சேனையே புவியிலுள்ள மாந்தரே வணங்க வாருங்கள் யெகோவாதாம் தயாபரர் எல்லாவற்றிற்கும் காரணர் அவரைப் போற்றுங்கள்

Saturday, 18 January 2020

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

Karthavin Janame Kaithalamudane கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே களிகூர்ந்து கீதம் பாடு சாலேமின் ராஜா நம் சொந்தமானார் சங்கீதம் பாடி ஆடு அல்லேலூயா அல்லேலூயா (2) சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் பாதாள வழி விலக்கி பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 2. நீதியின் பாதையிலே — அவர் நிதம் நம்மை நடத்துகின்றார் எது வந்த போதும் மாறாத இன்ப புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் 3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு மன்னவன் பாதத்திலே பசிதாகமின்றி துதி கானம் பாடி பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா (2) — கர்த்தாவின்