Wednesday, 30 October 2019

Valiyentral Ethu Athu Jeeva Oli வழியென்றால் எது அது ஜீவ வழி

Valiyentral Ethu Athu Jeeva Oli
வழியென்றால் எது? அது ஜீவ வழி
வழி காட்டிட வந்தவர் யார்? அவர் இயேசு
                     வழியும் அவர் ஒளியும் அவர்
                     ஜீவ நதியும் அவரே
                     சத்தியமும் அவர் நித்தியமும் அவர்
                     ஜீவ அப்பமும் அவரே அவர் இயேசு

1.   ஒளியென்றால் எது? அது ஜீவ ஒளி
     ஒளி காட்டிடும் உத்தமர் யார்? அவர் இயேசு  --- வழியும்

2.  ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்
   ஜலம் காட்டும் சற்குருயார்? அவர் இயேசு  --- வழியும்

3. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்
   சத்தியம் காட்டிடும் சற்குணர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

4. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்
  அப்பம் ஊட்டிடும் அன்புளர்  யார்? அவர் இயேசு  --- வழியும்

5. அன்பு என்றால் எது? அது தேவ அன்பு
 அன்பு காட்டிடும் நற்குணர் யார்? அவர் இயேசு   --- வழியும்

Karthar yesu Varuvar கர்த்தர் இயேசு வருவார்

Karthar yesu Varuvar
கர்த்தர் இயேசு வருவார் 
நித்தம் காத்துத் தவிக்கும் தேவ புத்திரர்
களிப்பாய் வானத்தில் சேர்ந்திடவே

1.மேகத்தில் தோன்றும் மின்னொளியில்
மகிமைக் கிறிஸ்து வெளிப்படுவார்
தூதர் தொனி ஆரவாரத்துடன்
தேவ எக்காளம் முழங்கிடுமே - கர்த்தர்

2.ஆண்டவர் அழைத்த முதற்பலன்கள்
அமரர் வடிவாய் மாறிடுவோம்
கர்த்தருக்குள் மரித்தோர் எழும்ப
பக்தர்களோடு பறந்திடுவோம் - கர்த்தர்

3.தம் மணவாட்டி ஆயத்தமே
துதியே செலுத்தி மகிழ்ந்திடவே
நீதி விளங்கும் நல் வெண் வஸ்திரம்
ஜோதி இலங்கத் தரித்திடுவார்  - கர்த்தர்

4.நூதன சாலேம் வந்திறங்கும்
நடுவான மீதில் அலங்கரிப்பாய்
ஆட்டுக்குட்டியானவர் விருந்தே
அன்று சந்தோஷ சுப மங்களம் - கர்த்தர்

5.வெண் குதிரை மேல் ஏறிவந்தே
கண்கள் நெருப்பாய் மிக ஜொலித்தே
உண்மையும் சத்தியமும் நிறைந்தே
விண் மணவாளன் ஜெயம் எடுப்பார் – கர்த்தர்




Tuesday, 29 October 2019

Inba Thunba Nerathilum Un இன்ப துன்ப நேரத்திலும் உன்

Inba Thunba Nerathilum Un
இன்ப துன்ப நேரத்திலும்  உன்
அன்புள்ள இயேசுவைப் பார்

1.இன்பத்தினால் அகமகிழ்ந்து 
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேருலகில்
சிக்கிக்கொண்டு இருக்கும் போதும்  - இன்ப

2. சோதனையால் பிடிபட்டு 
இடுக்கண்ணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினி யாஸ்திரம் எரியும்போதும் - இன்ப

3.தோழரால் பகைக்கப்பட்டு 
மனகிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை  விட்டோடும் போதும் - இன்ப

4.அவர் தாமே சோதிக்கப்பட்டு 
பாடு நமக்காய் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும்
நமக்கு உதவி செய்ய வல்லவராம் - இன்ப

5.வறுமையினால் யாசித்து 
பாடு மிகப்படும் போது
சாத்தான் உன்னைப் பகடிப் பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும் போதும் – இன்ப

6.கடுநோயால் பெலன் குன்றி 
பெவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் - இன்ப

7.பகைஞரால் கல்லெறியுண்டு 
மரண நேரம் கிட்டும்போது
பக்தன் ஸ்தேவானைப் போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் - இன்ப

8.நான்  என் இயேசுவின் தரிசனத்தை 
நிமிஷந் தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள் 
என்றவர் என்னை தேற்றுகிறார் – இன்ப

Sunday, 27 October 2019

Naan Umai Patri Ratchaga நான் உம்மைப் பற்றி இரட்சகா

Naan Umai Patri Ratchaga
1.நான் உம்மைப் பற்றி இரட்சகா
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில்
நம்பி வந்து நிற்க்கையில்
பாவ பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்

2.ஆ உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மா வல்ல வாக்கின் உண்மையைக்
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

Virunthai Serumen Alaikirar
1.விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன் போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா பாவி வா

2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா பாவி வா

3. மீட்பரின் பாதமும் சேராவிடில்
தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்
இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர்
வா பாவி வா

4. மோட்சத்தின் பாதையில் முன்செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்
வாடாத கிரீடமும்
ஆனந்த களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா பாவி வா

5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்

Theeratha Thagathal En Ullam தீராத தாகத்தால் என் உள்ளம்

Theeratha Thagathal En Ullam
1. தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,
ஆ  ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே.

2. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;
நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே.

3. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,
மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர்.

4. உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,
உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர்.

5. மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;
மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர்.

6. இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;
என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே.

Friday, 25 October 2019

Kartharai Padiye Potriduvome கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvome
1.கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே

2.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின்  மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்

3.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே  நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார்

4.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

5.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட  இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே  அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்