Sunday, 14 November 2021

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்


 


ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்

 

1. அற்புதமான அன்பே – என்னில்

பொற்பரன் பாராட்டும் தூய அன்பே

என்றும் மாறா தேவ அன்பே

என்னுள்ளம் தங்கும் அன்பே – ஸ்தோத்திரம்

 

2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில்

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே

தியாகமான தேவ அன்பே

திவ்விய மதுர அன்பே – ஸ்தோத்திரம்

 

3. மாய உலக அன்பை – நம்பி

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே

என்னை வென்ற தேவ அன்பே

என்னில் பொங்கும் பேரன்பே – ஸ்தோத்திரம்

 

4. ஆதரவான அன்பே – நித்தம்

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே

உன்னதமான  தேவ அன்பே

உள்ளங் கவரும் அன்பே – ஸ்தோத்திரம்

 

5. வாக்கு மாறாத அன்பே – திரு

வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே

சர்வ வல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே – ஸ்தோத்திரம்


Friday, 12 November 2021

Thuthiye Thuthiye Thuthiye Thuthiye துதியே துதியே துதியே துதியே


 


துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே

1. தூதகணங்கள் தூயவருந்தன்
பாத சேவை செய்து பணிந்துமைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் – துதியே

2. அண்ட சராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மை துதிக்கும்
முண்டலாதிபனும் நீர் – துதியே

3. பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர்  – துதியே

4. அந்தகாரமதின் அடிமைகளுக்கு
சுந்தர ஒளியைச் சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் – துதியே

5. மீட்கப்பட்டவர் ஆனந்தங்கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட்கொண்ட நாதனும் நீர் – துதியே

6. கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜாவே
நித்தியமான எம் தேவாதி தேவனே
துத்தியம் செய்திடுவோம் – துதியே


ஜாதிகளே எல்லோரும்


 ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

ஏகமாய் துதித்தே போற்றிப்பாடுங்கள்

தேவன் அளித்த நன்மை பெரியதே

கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாததே


1. இன்றைத் தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட

ஈந்தளித்தீர் உந்தன் கிருபை

இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்

என்றும் அவர் துதி பாடி மகிழ்வோம் --- ஜாதிகளே


2. ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு தந்தார்

சேதமின்றி என்னைக் காத்தாரே

ஜீவியப் பாதையில் தேவை தந்து

ஜெயக்கீதம் பாட ஜெயமளிப்பார் --- ஜாதிகளே


3. பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி

சாவு பயம் யாவும் போக்கினார்

சோதனை வேதனை சூழ்கையில்

சோர்ந்திடாமல் தாங்கி பெலனளிப்பார் --- ஜாதிகளே


4. எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார்

சொந்த பிள்ளையாக மாற்றினார்

நாடியே வந்தென்னை ஆதரித்து

வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட --- ஜாதிகளே


5. வானம் பூமியாவும் மாறிப்போகும் ஓர் நாள்

வானவரின் வாக்கு மாறாதே

நீதியின் சூரியன் தோன்றிடும் நாள்

சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை --- ஜாதிகளே

Wednesday, 10 November 2021

Mahilnthu Kalikkum மகிழ்ந்து களிக்கும்


 


1. மகிழ்ந்து களிக்கும் வனாந்தரம்

மலர்ந்து செழிக்கும் வறண்டநிலம்

ஜொலித்து பூரிக்கும் அலங்காரம்

கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்தும்

 

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி

தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்தி

திடன் கொள்ளுவோம் பயம் நீக்குவோம்

நம் மீட்பின் தேவன் வருகின்றார்  

 

2. இருண்ட கண்கள் ஒளிபெறுமே

செவிடர் செவிகள் திறந்திடுமே

முடவன் மான்போல் குதித்திடுவான்

ஊமையன் நாவு பாடிடுமே

 

3. இராஜபாதை இது என்றே

தூயபாதை இது நன்றே

பாதகர் அங்கு நடப்பதில்லை

பேதையர் வழிகெட்டுப் போவதில்லை

 

4. மீட்கப்பட்டோர் கெம்பீரமாய்

ஆனந்தக் களிப்புடனே வருவார்

சஞ்சலம் தவிப்பும் அங்கே இல்லை

சந்தோஷம் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை


Tuesday, 9 November 2021

Azhagai Nirkum Yaar Ivargal


 

அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

1. காடு மேடு கடந்த சென்று
கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள்அழகாய்

2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போன்று நின்றவர்கள்
யாசித்தாலும், போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்அழகாய்

3. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர்அழகாய்

4. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு
வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து
ஆர்ப்பரிப்பார் பிதாவின்  முன்பு
ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்றுஅழகாய்

5. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகமடையார்
வெயிலாகிலும், அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லைஅழகாய்

6. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமேஅழகாய்


Monday, 8 November 2021

Ennidathil Palar Yarum என்னிடத்தில் பாலர் யாரும்


 

1. என்னிடத்தில் பாலர் யாரும்
வர வேண்டும் என்கிறார்
இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்
என்று சொல்லி நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா மா ஸ்தோத்திரம்
என்று பாடி சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி பக்தியாய்
இயேசுவை வணங்கி என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்

3. பாலனாய் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்
நல்லோர் தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்


Sunday, 7 November 2021

Alaithavarae Nadathiduvar அழைத்தவரே நடத்திடுவார்


 


அழைத்தவரே நடத்திடுவார்

நம்பினவர் நானறிவேன்

நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே

நன்றியுடன் துதித்திடுவேன்

 

1. பச்சை மரம் உந்தனுக்கே

பாடுகளின் வழியானால்

பட்டமரம் எங்களுக்கே

பாருலகம் என்ன செய்யும்

 

2. குற்றமில்லா உந்தனையே

குறை சொல்லும் உலகமிது

குற்றமுள்ள மனிதனே நான்

குருவே உம் அருள் வேண்டும்

 

3. நம்பினவன் மறுதலித்தான்

நண்பனவன் சதி நினைத்தான்

நல்லவரைப் பகைத்து விடும்

நன்றியில்லா உலகமிது

 

4. சிங்காசனம் விட்டு வந்து

சிலுவை மரம் சுமந்தவரே

நினைத்திடுவேன் உம் சிலுவை

சகித்திடுவேன் துன்பங்களை

 

5. ஜீவனையும் வெறுத்தவனே

ஜீவனதை அடைந்திடுவான்

சீக்கிரமாய் வந்திடுவீர்

சேர்ந்திடுவேன் உம் சமூகம்