1. தேசத்தார்கள் யாரும் வந்து
சுவிசேஷ வார்த்தையே
கேட்டு உந்தன் ஜோதி கண்டு
சேவிப்பார்கள் என்றீரே
ஆ கர்த்தாவே
வாக்கை நிறைவேற்றுமேன்
2. வையகம் எல்லாம் மிகுந்த
புத்தியீனமுள்ளது
அதால் மாந்தர்க்குள் புகுந்த
கேடு மா பலத்தது
ஆ கர்த்தாவே
மாந்தரை நீர் ரட்சியும்
3. உம்முடைய வார்த்தை சொல்ல
போகும் போதகர்களை
நீர் பலப்படுத்தி, நல்ல
புத்தி தந்து நேசத்தை
ஆவியாலே
ஊழியர்க்கு ஈந்திடும்
4. வார்த்தை கேட்கும் ஊர் ஜனங்கள்
உண்மையை உணரவும்
அங்கங்குள்ள தீயோன் சக்தி
யாவும் நீங்கிப் போகவும்
தூய வல்ல
ஆவியைக்
கடாட்சியும்