Saturday, 9 October 2021

Naan Sellum Paathai நான் செல்லும் பாதை


 

நான்செல்லும்பாதை என்
 நேசர்அறிவாரே
 நாசம்அணுகாமல்காப்பாரே

1. மரணப்பள்ளத்தாக்கிலும்நான்
வரும்எத்தீமைக்கும்அஞ்சேன்
கருத்தாய்க்காத்திட வாக்குத்தவறிடா
வல்ல ஓர்தேவன்உண்டெனக்கு   — நான்

2. கண்ணீரின்பள்ளத்தாக்கல்லோ இது
தண்ணீரில்லாப்பாலையன்றோ
கண்ணீரை மாற்றியே சந்தோஷம்பொங்கிடும்
தணணீர்த்தடாகமாய்மாற்றுவார் ‌ — நான்

3. பாடுகள்சகித்த இயேசு அவர்
நடந்த பாதை இதல்லோ
ஓடியே வீரனாம்இயேசுவை நோக்கியே
பாடுவேன்நம்பிக்கையுடனே   — நான்

4. மண்வாழ்வின்இன்பம்வெறுத்தேன் மேல்
விண்வாழ்வின்இன்பத்தைக்கண்டே
துன்பங்கள்மூலமாய்ச்சுத்தரானோருடன்
பொன்நகரம்சேர்ந்து வாழுவேன்‌   — நான்

5. ஆதரவாய்இடைகட்டி என்னை
ஆனந்தமாயோடச்செய்தார்
ஆவி அச்சாரத்தால்புத்திர சுவிகாரம்
ஆளுகையும்அன்று பெறுவேன்‌   -- நான்

6. மங்கள கீதம்முழங்க  சபை
எங்கும்துதிகளைச்சாற்ற
எங்களின்மன்னவன்மங்கிடா நீதியின்
செங்கோலும்ஓங்குமே நித்தியமாய்‌   -- நான்

Naan Ummai Uruthiyaga நான் உம்மை உறுதியாக


 

நான் உம்மை உறுதியாக
என்றென்றும் பற்றிடுவேன்
சமாதானம் பூரணமாய்
அளித்து என்றும் நடத்துவீர்

1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர்
என் ஆவி உம்மைத் தேடும்
உந்தனின் பாதையில்
செம்மையாய் நடத்துவீர்நான்

2. நல் வாசல்கள் திறந்திட
உம் தாசர் உள்ளே செல்வார்
சத்தியம் காத்திட
கர்த்தனே அருள் செய்வீர்நான்

3. உம் நியாயங்கள் நிறைவேற
உம் வேளைக்காக வந்தோம்
தேவனே ராஜனே
ஜெயமதைத் தந்திடுவீர் நான்

4. என் கிரியைகள் அனைத்துமே
நீர் ஏற்று என்றும் காப்பீர்
நடத்தியே தாங்குவீர்
சமாதானம் அருள்வீர்நான்

5. உம் கைகள் எமக்காய் ஓங்கிட
உம் வல்லமை விளங்கும்
உம்மையே சார்ந்துமே
உம் புகழ் சாற்றிடுவோம்நான்

Friday, 8 October 2021

Yaar Vendum Naatha யார் வேண்டும் நாதா


 

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

1. உம்மோடல்லாது வாழ்வது ஏன்
உம் உள்ளம் மகிழாது வாழ்வது ஏன்
மனம் போன வாழ்க்கை  வாழ்க்கையல்ல
வாழ்வேனே என்றும் உமக்காக நான்

2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதோ
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால்

3. உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

4. உற்றாரின் பாசம் உடன் வருமோ
மற்றோரின் நேசம் மாறாததோ
உம்மன்பின் நேசத்திற் கிணையாகுமோ
ஏனய்யா கேட்டீர் இக் கேள்வியை

5. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Thursday, 7 October 2021

Arpanithen Ennai Mutrilumai அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்


 

1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே  எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. பாதாளம் மரணம் அண்டக் கூடா
மாபெரும் அக்கினியாம் உந்தன் நேசம்
வெள்ளமோ ஆட்சியோ தணித்திடா
நேசமே உமக்கே நான் அடிமை

5. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறந்திட முற்றும் தந்தேன்

Wednesday, 6 October 2021

Yesuvin Namamae Kiristhesuvin Namamae இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே


 

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே – வானம்
பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. மாந்தர் போற்றும் நாமம் – விண்
தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் – இயேசு

2. பாவம் போக்கும் நாமம் – தூய
வாழ்வளிக்கும் நாமம்
நித்திய ஜீவன் அருளும்
ஈடில்லாத நாமம் – இயேசு

3. பேய் நடுங்கும் நாமம் – கடும்
நோய் அகற்றும் நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் – இயேசு

4. இனிமை தங்கும் நாமம் – தீய
இன்னல் மாற்றும் நாமம்
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லாத நாமம் – இயேசு

5. சாவை வென்ற நாமம் – பாவ
சாபம் போக்கும் நாமம்
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே – இயேசு

Tuesday, 5 October 2021

Konja Kaalam கொஞ்ச காலம்


 

கொஞ்ச காலம் இயேசுவிற்காக

கஷ்டப்பாடு சகிப்பதினால்

இன்னல் துன்பம் இன்பமாய் மாறும்

இயேசுவை நான் காணும் போது

 

அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன்

ஆனந்த கண்ணீர் வடிப்பேன்

எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும்

அந்த நாடு சுதந்தரிப்பேன்

 

1. கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை

கடந்தென்று நான் மறைவேன்

ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே

தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் - கொஞ்ச

 

2. இந்த தேகம் அழியும் கூடாரம்

இதை நம்பி யார் பிழைப்பார்

என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே

இயேசுவோடு நான் குடியிருப்பேன் - கொஞ்ச

 

3. வீணை நாதம் தொனித்திடும் நேரம்

வரவேற்பு அளிக்கப்படும்

என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுவார்

எனக்கானந்தம் பொங்கிடுமே - கொஞ்ச

 

4. பலியாக காணிக்கையாக

படைத்தேனே உமக்காக

என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே

ஏழை நான் என்றும் உம் அடிமைகொஞ்ச

Monday, 4 October 2021

Kaalai Thorum Karthanae காலை தோறும் கர்த்தனே


 

காலை தோறும் கர்த்தனே புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன்

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்

4. கனிமரமாய் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்

5. ஜாதிகள் நடுவில் உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்