Thursday, 9 September 2021

Naanum En Veetaarumovendral நானும் என் வீட்டாருமோவென்றால்


 

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா  நீயும் சேவிப்பாயா

1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பா யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2. அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா

3. நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா

4. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா

Tuesday, 7 September 2021

Bayapadathae Siru Manthaiyae பயப்படாதே சிறுமந்தையே


 

பயப்படாதே சிறுமந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே

1.புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின்  இராஜ்ஜியமே
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர்மலன் ஆவியாலே

2.ஐசுவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவார் இயேசுவோடு

3.கர்த்தாவே என்றும் கனியற்ற  மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில்

4. பலவந்தம் செய்வோர் பெற்றிடும் இராஜ்ஜியம்
சமீபமாய் இருக்கின்றதே
இரத்தம் சிந்திப் பாவத்தை எதிர்த்து
பெறுவோம் இராஜ்ஜியத்தை

Monday, 6 September 2021

Senaiyin Kartha சேனையின் கர்த்தா


 

1. சேனையின் கர்த்தா
சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம்
கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்

2. ராஜாதி ராஜா
சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே
உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே

3. சேனையின் கர்த்தா
சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும்
கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை

4. மன்னா நீர் சூரியன்
என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு
நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்

5. திரியேக தேவே
மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும்
சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.

Manida uruvil மானிட உருவில்


 

மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

2. கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

3. இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

4. அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

5. கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்

Sunday, 5 September 2021

Aravanaikkum Yesu அரவணைக்கும் இயேசு


 

அரவணைக்கும் இயேசு
அன்பாய் அழைக்கிறார்
ஆதரிக்கும் இயேசு
அன்பாய் அழைக்கிறார்

1. தாங்கா துயரம் தாக்கும் நேரம்
தயங்காமல் வந்திடுவார்
இன்னல் நீக்கி இன்பம் நல்கி
இரக்கம் காட்டிடுவார்

2. வியாதி வருத்தம் வறுமை தாகம்
வல்லவரால் நீங்குமே
அரவணைக்கும் அன்பர் இயேசு
ஆற்றியே தேற்றிடுவார்

3. தந்தை தாயும் கைவிட்டாலும்
தாங்கி அரவணைப்பார்
உள்ளங்கையில் வரைந்த தேவன்
உன்னை உயர்த்திடுவார்

Friday, 3 September 2021

Enna Thyagam En Kalvari Nayagaa என்னத் தியாகம் என் கல்வாரி நாயகா


 

என்னத் தியாகம் என் கல்வாரி நாயகா

 என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ

 

1. விண் தூதர் போற்றிடும் உம்

   பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே

  மாட்டுக் கொட்டிலை வாஞ்சித்தீரையா

  மானிடர் மேல் அன்பினால் - என்ன

 

2. ஜெனித்த நாள் முதலாய்

  கல்வாரியில் ஜீவனை ஈயும் வரை

  பாடுகள் யாவையும் பட்டீரையா

 பாவியை மீட்பதற்காய் - என்ன

 

3. தலையை சாய்த்திடவோ

   உமக்கு ஓர் ஸ்தலம் எங்குமில்லையே

   உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ

  முன் பாதை காட்டினீரே - என்ன

 

4. பாடுகளெல்லாம் உம்மை

   மகிமையில் பூரணமாய் சேர்த்ததே

  உம்மோடு நானும் பாடு சகிக்க

  என்ன தடையுமுண்டோ - என்ன

 

5. பொய் இன்பம் எனக்கினியேன்

என்னருமை இயேசுதான் என் பங்கல்லோ

நேசரின் பின்னே போகத் துணிந்தேன்

நேச வலிமையினால்என்ன

Pilavunda Malaiyae Pugalidam பிளவுண்ட மலையே புகலிடம்


 

1. பிளவுண்ட மலையே

புகலிடம் ஈயுமே

பக்கம் பட்ட காயமும்

பாய்ந்த செந்நீர் வெள்ளமும்

பாவதோஷம் யாவையும்

நீக்கும்படி அருளும்.

 

2. எந்தக் கிரியை செய்துமே

உந்தன் நீதி கிட்டாதே

கண்ணீர் நித்தம் சொரிந்தும்

கஷ்ட தவம் புரிந்தும்

பாவம் நீங்க மாட்டாதே

நீரே மீட்பர் இயேசுவே.

 

3. யாதுமற்ற ஏழை நான்

 நாதியற்ற நீசன் தான்

உம் சிலுவை தஞ்சமே 

உந்தன் நீதி ஆடையே

தூய ஊற்றை அண்டினேன்

தூய்மையாக்கேல் மாளுவேன்.

 

4. நிழல் போன்ற வாழ்விலே

கண்ணை மூடும் சாவிலே

கண்ணுக்கெட்டா லோகத்தில் 

நடுத்தீர்வை தினத்தில்

பிளவுண்ட மலையே