Saturday 28 August 2021

Vaana Pitha Thantha vethathilae வான பிதா தந்த வேதத்திலே


 

1. வான பிதா தந்த வேதத்திலே

  நான் மகிழ்வேன் அன்பு சொல்லுகிறார்

 இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே 

ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்

 

ஆனந்தம் யேசு நேசிக்கிறார்

நேசிக்கிறார் நேசிக்கிறார்

ஆனந்தம் இயேசு நேசிக்கிறார்

 நேசிக்கிறார் என்னையும்.

 

2.  நான் மறந்தோடினும் நேசித்தென்னைச்

சென்ற இடம் வந்து தேடுகிறார்

மீண்டும் நினைந்தவர் நேசந்தன்னை

ஆண்டவர் அண்டுவேன் நேசிக்கிறார்

 

3. நேசிக்கிறார் நானும் நேசிக்கிறேன்

 மீட்கவந் தாத்துமம் நேசிக்கிறார்

 சாவு மரத்தில் அந் நேசங்கண்டேன்

நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்

 

4. நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்

 நம்பும் என் யேசென்னை வாழ்விக்கிறார்

 யேசென்னை நேசிக்கிறார் என்றேன் நான்

சாத்தான் நில்லா தஞ்சி ஓடக் கண்டேன்

Vanthaalum Yesuvae Vaarumithil வந்தாளும் இயேசுவே வாருமிதில்


 

வந்தாளும் இயேசுவே வாருமிதில்தேவ
மைந்தர்கள் கூடுமிந் நேரமிதில்

1.பத்மு தீவில் பரிசுத்த நாளில் வந்த வண்ணமே
சத்துருக்கள் கூட்டமெல்லாம் சக்தியற்றுச் சோரவே
இத்தினத்தில் இங்கு வந்திடும்தேவா

2.நல்வழியை நாடிடாமல் ஓடும் நரர் யாவர்க்கும்
கல்வாரியின் அன்பையின்று கர்த்தனே நீர் காட்டியே
நற்குணம் அவர்க்கு நல்கிடும்தேவா

3.சக்தியில்லை எங்களுக்கு சாம்பலும் தூசியும்
கர்த்தனே கருணை கூர்ந்து தந்திடும் சர்வாயுதம்
புத்தியாக யுத்தம் செய்திடதேவா

4.என்னை நோக்கிக் கூப்பிடில் அளித்திடுவேன் உத்தரம்
பின்னும் நீ அறிந்திடாத வல்லமைகள் காட்டுவேன்
என்றவா இந்நேரம் வாருமேதேவா

5.சதா காலங்களிலும் இருப்பேனுங்கள் கூடவே
சத்துருவின் வல்லமைகள் ஒன்றும் மேற்கொள்ளாதென்றீர்
ஆதலாலனந்த ஸ்தோத்திரம்தேவா

Anbe Kalvari Anbe அன்பே கல்வாரி அன்பே


 

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதய்யா

1. தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்  
பரிகார பலியானீர்

2. காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

3. அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

4. நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Thursday 26 August 2021

Isravelin Thuthikul இஸ்ரவேலின் துதிக்குள்


 

இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
இறங்கி வந்திடுமே

1. உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம்

2. இஸ்ரவேலின் எக்காளம் மகா
ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கோட்டைகளை
இடித்து தகர்த்திடுவோம்

3. எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள்
என்றீர் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சமாதானம் ஈந்திடுமே

4. ஆசாரியர் லேவியர் ஒருமித்தும்மை
ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
ஆலயமாய் எம்மை பூவில் காண
உம் மகிமையால் நிரப்பிடுமே

5. உம் கிருபையின் மகிமைக்குமே
எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
எம்மை மீட்கவே முத்தரித்தீரே
எம் ஆவியானவரால்

Karthar Periyavar கர்த்தர் பெரியவர்


 

கர்த்தர் பெரியவர் அவர் நமது
தேவனுடைய நகரத்திலே
தமது பரிசுத்த பர்வதத்திலே
மிகத் துதிக்கப்படத் தக்கவர்

1. வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம்
வடிப்பமான ஸ்தானமே
சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது
அது மகா ராஜாவின் நகரம்

2. அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய்
அடைக்கலமாக அறியப்பட்டார்
இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து
அதை கண்டு விரைந்தோடினர்

3. தேவனே உமது ஆலயம் நடுவே
உம் கிருபையை சிந்திக்கிறோம்
பூமியின் கடையாந்தர பரியந்தமும்
உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே

4. இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன்
மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
நித்திய மகிமையில் சேர்த்திடுவார்

Tham kirubai Perithallo


 

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே

1. தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமேதம் கிருபை

2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமேதம் கிருபை

3. தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமேதம் கிருபை

4. மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமேதம் கிருபை

5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமே
நிலை நிற்கும் கிருபை தாருமேதம் கிருபை

6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமேதம் கிருபை

7. கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமேதம் கிருபை

Wednesday 25 August 2021

Nam Devanai Thuthithu Paadi நம் தேவனை துதித்துப் பாடி


 

நம் தேவனைத் துதித்துப் பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்களி கூர்