Tuesday, 12 January 2021
Buthikkettatha Anbin புத்திக் கெட்டாத அன்பின்
Buthikkettatha Anbin1. புத்திக் கெட்டாத அன்பின் வாரீ பாரும் உம் பாதம் அண்டினோமே தேவரீர் விவாகத்தால் இணைக்கும் இருபேரும் ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர். 2. ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம் நல் நம்பிக்கையும், நோவு சாவிலும் உம்பேரில் சாரும் ஊக்க விசுவாசம் குன்றாத தீரமும் தந்தருளும். 3. பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர் வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்.
Karththanai Valthukiren கர்த்தனை வாழ்த்துகிறேன்
Karththanai Valthukirenகர்த்தனை வாழ்த்துகிறேன் - அவர் கிருபைகள் என்னிடம் தங்க நன்மை நிறைந்த ஆண்டிதுவே நன்றியும் பொங்கப் பாடிடுவேன் 1.சுற்றிலும் ஸ்தோத்திர தொனி கேட்கும் வெற்றியின் சாட்சி கூறிடுவேன் இத்தனை ஆண்டுகள் ஜெயம் அளித்தார் எத்தனை நாவால் போற்றிடுவேன் 2.ஆண்டுகள் தோறும் வாக்குத்தத்தம் ஆண்டவர் அன்பாய் ஈந்திடுவார் கர்த்தரை நம்பியே திடமனதாய் கடந்திடுவேன் இவ்வாண்டினையும் 3.யூபிலி ஆண்டு விடுதலையே இயேசுவின் ஆவி வந்திறங்க கட்டுகள் யாவும் அகன்றனவே கலப்பையின் மேல் கை சேவிக்குதே 4.ஓர் புது பாதை தோன்றிடுதே ஓங்கும் தம் கைகள் தாங்கிடுமே கர்த்தரிடம் என் உடன்படிக்கை காத்துக் கொள்வேன் அந்நாள் வரையும் 5.சீக்கிரம் இயேசு வந்திடுவார் சேர்ந்திடுவேன் நான் சீயோனிலே சீரழியும் இந்த மண்ணுலகம் சீர் புகழ் ஓங்கும் விண்ணுலகம்
Sunday, 10 January 2021
Manam Isainthu Anaivarum மனம் இசைந்து அனைவரும்
Manam Isainthu Anaivarumமனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு 1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது 2. அது - எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது 3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு எத்தனை பிரிவுகள் உண்டு அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு
Friday, 8 January 2021
Nandri Solli Paduven நன்றி சொல்லி பாடுவேன்
Nandri Solli Paduvenநன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் என் உள்ளம் நிறைந்தே நாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரே நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே 1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மணி போல் காத்தாரே கரத்தைப் பிடித்துக் கைவிடாமல் கனிவாய் என்னை நடத்தினாரே 2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு எதிராய் வந்து எழும்பினாலும் சேனையின் கர்த்தர் என் முன்னே செல்கிறார் என்று பயப்படேனே 3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே சூழ்ந்து என்னை நெருக்கினாலும் கன்மலை தேவன் என்னோடு இருக்க கவலையில்லை என் வாழ்விலே 4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு வேகம் வருவார் ஆனந்தமே கண்ணீர் துடைத்து பலனைக் கொடுக்க கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே
Andavarin Thottam ஆண்டவரின் தோட்டம்
Andavarin Thottamஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரைப் புகழச் சொல்லுது தேவ ஜீவராகம் பிறந்திட ஜோதி ரூபம் நாளும் முழங்கிட ஆடிப்பாடுவோம் வையகமே வானகமே விண் ஒளிரும் மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள் 1. ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியே கூடுங்கள் (2) நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள் 2. மாநிலமே மேனிலமே நில்லுங்கள் நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் (2) நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
Thursday, 7 January 2021
Devan illai Entru தேவன் இல்லையென்று
Devan illai Entruதேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் உண்மை எங்குமில்லை இன்று நன்மை செய்வாரில்லை 1. தன்னையும் தேடுபவன் மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் நல்லவர் யாருமில்லை 2. பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார் 3. தேவாதி தேவனையே தொழுபவர் மறைவதில்லை பரலோகில் பொக்கிஷமாய் நம்மையே சேர்த்துக்கொள்வார் 4. பாவ உலகினில் பரிசுத்தராய் வந்தார் பாவங்கள் போக்கிடவே பரிசுத்தர் பலியானார்
Sunday, 3 January 2021
Innor Aandu Mutrumai இன்னோர் ஆண்டு முற்றுமாய்
Innor Aandu Mutrumai1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும் எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின் உந்தன் கோலாலே தேற்றும் நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய் தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே என்றும் உம்மைப் போற்றுவோம் உந்தன் வீட்டில் வாழுவோம்.
Subscribe to:
Posts (Atom)