Sunday, 10 January 2021
Manam Isainthu Anaivarum மனம் இசைந்து அனைவரும்
Manam Isainthu Anaivarumமனம் இசைந்து அனைவரும் உடன் பிறப்பாய் தினம் வாழ்வது சிறப்பானது நன்மையானது இன்பமானது மண்வாழ்வினில் பேரழகு 1. அது - ஆரோனின் தலைமீது பொழிந்து அவனது தாடியில் வழிந்து அங்கியில் குழைந்து தொங்கலில் இழைந்து கீழ் வடிந்திடும் பரிமளம் போன்றது 2. அது - எர்மோனின் மலையதன் மேலும் சீயோனின் சிகரங்கள் மீதும் மெல்லெனக் கவிந்து சில்லெனக் குவிந்து தினம் படர்ந்திடும் பனியினைப் போன்றது 3. இன்று - இனம்மொழி பொருள்நிலை கொண்டு எத்தனை பிரிவுகள் உண்டு அன்பினில் பகிர்ந்துஇன்பமாய் இணைந்து ஒன்றாய் இணைந்து வாழ்வதே அருளரசு
Friday, 8 January 2021
Nandri Solli Paduven நன்றி சொல்லி பாடுவேன்
Nandri Solli Paduvenநன்றி சொல்லி பாடுவேன் நாதன் இயேசுவின் நாமத்தையே நன்றியால் என் உள்ளம் நிறைந்தே நாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரே நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே 1. கடந்த நாட்கள் முழுவதும் என்னை கண்ணின் மணி போல் காத்தாரே கரத்தைப் பிடித்துக் கைவிடாமல் கனிவாய் என்னை நடத்தினாரே 2. எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு எதிராய் வந்து எழும்பினாலும் சேனையின் கர்த்தர் என் முன்னே செல்கிறார் என்று பயப்படேனே 3. துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே சூழ்ந்து என்னை நெருக்கினாலும் கன்மலை தேவன் என்னோடு இருக்க கவலையில்லை என் வாழ்விலே 4. மேகங்கள் மீது மன்னவன் இயேசு வேகம் வருவார் ஆனந்தமே கண்ணீர் துடைத்து பலனைக் கொடுக்க கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே
Andavarin Thottam ஆண்டவரின் தோட்டம்
Andavarin Thottamஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம் ஆடிப்பாட நெஞ்சை தூண்டுது அன்பு பொங்கும் உள்ளம் அருள் வசந்த இல்லம் ஆண்டவரைப் புகழச் சொல்லுது தேவ ஜீவராகம் பிறந்திட ஜோதி ரூபம் நாளும் முழங்கிட ஆடிப்பாடுவோம் வையகமே வானகமே விண் ஒளிரும் மீனினமே சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள் 1. ஆறுகளே அருவிகளே வாருங்கள் நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள் நானிலமே நவமணியே கூடுங்கள் (2) நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள் 2. மாநிலமே மேனிலமே நில்லுங்கள் நீல மலர் முடியே மனுக்குலமே கேளுங்கள் பறவைகளே பறவைகளே வாருங்கள் (2) நம் பரம பிதா இரக்கத்தையே போற்றுங்கள்
Thursday, 7 January 2021
Devan illai Entru தேவன் இல்லையென்று
Devan illai Entruதேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான் உண்மை எங்குமில்லை இன்று நன்மை செய்வாரில்லை 1. தன்னையும் தேடுபவன் மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் நல்லவர் யாருமில்லை 2. பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லை கர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார் 3. தேவாதி தேவனையே தொழுபவர் மறைவதில்லை பரலோகில் பொக்கிஷமாய் நம்மையே சேர்த்துக்கொள்வார் 4. பாவ உலகினில் பரிசுத்தராய் வந்தார் பாவங்கள் போக்கிடவே பரிசுத்தர் பலியானார்
Sunday, 3 January 2021
Innor Aandu Mutrumai இன்னோர் ஆண்டு முற்றுமாய்
Innor Aandu Mutrumai1. இன்னோர் ஆண்டு முற்றுமாய் எங்களை மகா அன்பாய் காத்து வந்தீர் இயேசுவே உம்மைத் துதி செய்வோமே. 2. நீரே இந்த ஆண்டிலும் எங்கள் துணையாயிரும் எந்தத் துன்பம் தாழ்விலும் கூடத் தங்கியருளும். 3. யாரேனும் இவ்வாண்டினில் சாவின் பள்ளத்தாக்கினில் செல்லின் உந்தன் கோலாலே தேற்றும் நல்ல மேய்ப்பரே. 4. நாங்கள் உந்தன் தாசராய் தூய்மை பக்தி உள்ளோராய் சாமட்டும் நிலைக்க நீர் காத்து கிரீடம் ஈகுவீர். 5. ஏக கர்த்தராம் நீரே மன்னர் மன்னன் எனவே என்றும் உம்மைப் போற்றுவோம் உந்தன் வீட்டில் வாழுவோம்.
Saturday, 2 January 2021
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும்
Kelungal Tharapadum கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்தலேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) --- கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே --- கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே (2) --- கேளுங்கள் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் (2) அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார் இயேசு (2) --- கேளுங்கள் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே (2) --- கேளுங்கள் ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே --- கேளுங்கள்
Friday, 1 January 2021
Yesu Thane Athisaya Theivam இயேசு தானே அதிசய தெய்வம்
Yesu Thane Athisaya Theivamஇயேசு தானே அதிசய தெய்வம் என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம் 1. அதிசயமே அவர் அவதாரம் அதிலும் இனிமை அவர் உபகாரம் அவரைத் தெய்வமாய் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைத்து நிற்பதே சிலாக்கியம் — இயேசு 2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால் அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு 3. மனிதன் மறு பிறப்படைவதவசியம் மரித்த இயேசுவால் அடையும் இரகசியம் மறையும் முன்னே மகிபனைத் தேடு இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு 4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம் பாவிகளை நேசிக்கும் தெய்வம் ஆவியோடு உண்மையாய் தொழுதால் தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு
Subscribe to:
Posts (Atom)