Thursday, 24 December 2020
Perinba Nathiye பேரின்ப நதியே
Perinba Nathiyeபேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட பின் மாரியாக பொழிந்திடுமே (2) 1. எலியாவின் தேவன் எங்கே என்றானே சலியாமல் ஓடி சால்வை பெற்றானே பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள் பலவந்தமாக்கும் காலம் இதுவே (2) - பேரின்ப 2. மங்கும் திரிகள் நெரிந்த நாணல் தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர் அனலுமில்லாத குளிருமில்லாத அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே (2) - பேரின்ப 3. சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா உலரும் எலும்பும் உயிரை அடையும் உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா (2) - பேரின்ப 4. பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர் பரிசுத்த தேவ அழைப்பை பாரீர் தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன் தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே (2) - பேரின்ப 5. ஊனர் குருடர் தீரா நோயாளர் ஊமை செவிடர் பேயால் பாடுவோர் அற்புத செயலால் வேண்டிடுவோமே ஆண்டவரிடமே வேண்டிடுவோமே (2) - பேரின்ப 6. சத்திய பரனை பக்தியுடனே நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே ஏழை என் தாகம் தீர்த்திடுவேனே (2) - பேரின்ப
Monday, 21 December 2020
Deva Aseervatham Perugiduthe தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே
Deva Aseervatham Perugidutheதேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க தூதர் சேனை தம் மகிமையோடிறங்க 1. எழும்பு சீயோனே ஒளி வந்ததே எரிந்திடும் விளக்கே திருச்சபையே காரிருளே கடந்திடுதே கர்த்தரின் பேரோளி வீசிடுதே --- தேவ 2. நலமுடன் நம்மை இதுவரையும் நிலைநிறுத்திடுதே அவர் கிருபை கண்மணிபோல் கடைசிவரை காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம் --- தேவ 3. குறித்திடும் வேளை உயர்த்திடுவார் கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம் தாழ்வில் நம்மை நினைத்தவரை வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம் --- தேவ 4. தெரிந்தெடுத்தார் தம் மகிமைக்கென்றே பரிந்துரைத்திடுவார் பிழைத்திடுவோம் இரட்சிப்பினால் அலங்கரித்தார் இரட்சகர் திருவடி சேர்ந்திடுவோம் --- தேவ 5. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம் பரலோகந் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் --- தேவ
Sunday, 20 December 2020
Nam Devan Anbullavar நம் தேவன் அன்புள்ளவர்
Nam Devan Anbullavarநம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே (2) 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அன்பரின் பாதம் பணிவோம் (2) --- நம் 2. அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) --- நம் 3. வான மீதில் இயேசு இறங்கி வருவார் தேவ தூதர் போல மகிமை அடைவோம் ஆ எங்கள் தேவா வாருமே அழைத்து வானில் செல்லுமே (2) --- நம் 4. அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம் ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம் ஆ அந்த நாள் நெருங்குதே நினைத்தால் நெஞ்சம் பொங்குதே (2) --- நம்
Karthar En Menmaiyum கர்த்தர் என் மேன்மையும்
Karthar En Menmaiyumகர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2) 1. என் முகத்தை தேடும் என்றீர் இன்னமும் நான் அன்பு கூர்ந்து நோக்குவேன் உன் பொன் முகமே சிலுவை நோக்கி பார்த்த கண்கள் சூழ்நிலைகள் மாறினாலும் வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர் 2. தகப்பனும் தாயும் என்னைக் கைவிடும் வேளை வரினும் அரவணைக்கும் உந்தன் கரமே கழுகு தன் குஞ்சுகளைப் பறந்து காப்பது போல காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர் 3. எந்தனுக்கு விரோதமான எரிகோவின் மதில்களைத் தகர்த்து சாம்பலாக்கிடுவீர் எதிரிகளின் சேனைகள் என்றும் என்னைத் தொடராமல் பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர் 4. காலமோ கடைசியாகி பாவம் பாரில் படர்ந்து பெருகி உலக வேஷம் கடந்து செல்லுதே வருகைத் தாமதிக்கையில் புறாவைப் போல் சிறகிருந்தால் பறந்து வந்து உம்மைக் காணுவேன் – கர்த்தர்
Wednesday, 16 December 2020
Intru Kanda Egypthiyanai இன்று கண்ட எகிப்தியனை
Intru Kanda Egypthiyanaiஇன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை (2) 1. கசந்த மாரா மதுரமாகும் வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2) கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2) வெள்ளம் போல சத்துரு வந்தால் ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் (2) பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர் சத்துவத்தை அளித்திடுவார் (2) கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார் (2)
Tuesday, 15 December 2020
Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதி செய்
Yesuvaiye Thuthi Seiஏசுவையே துதி செய் நீ மனமே ஏசுவையே துதி செய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முடிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே
Monday, 14 December 2020
Meetparin Satham மீட்பரின் சத்தம்
Meetparin Sathamமீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம் மேகத்தின் மீது வருவேன் என்றார் எக்காளம் முழங்கிடும் வேளையில் தான் தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார் 1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல் அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல் அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின் 2. உலக கவலை மதியீனத்தால் உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே உன்னதர் இயேசுவை நேசியாமல் உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின் 3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு இயேசு என்னும் நேசருண்டு உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்
Subscribe to:
Posts (Atom)