Sunday 20 December 2020

Karthar En Menmaiyum கர்த்தர் என் மேன்மையும்


 Karthar En Menmaiyum

கர்த்தர் என் மேன்மையும் மகிமையுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர் யாருக்கு அஞ்சிடுவேன் - நான் (2) 1. என் முகத்தை தேடும் என்றீர் இன்னமும் நான் அன்பு கூர்ந்து நோக்குவேன் உன் பொன் முகமே சிலுவை நோக்கி பார்த்த கண்கள் சூழ்நிலைகள் மாறினாலும் வெட்கமடைந்து போவதில்லையே - கர்த்தர் 2. தகப்பனும் தாயும் என்னைக் கைவிடும் வேளை வரினும் அரவணைக்கும் உந்தன் கரமே கழுகு தன் குஞ்சுகளைப் பறந்து காப்பது போல காத்த உந்தன் செட்டை தஞ்சமே - கர்த்தர் 3. எந்தனுக்கு விரோதமான எரிகோவின் மதில்களைத் தகர்த்து சாம்பலாக்கிடுவீர் எதிரிகளின் சேனைகள் என்றும் என்னைத் தொடராமல் பின்தொடர்ந்து வந்திடுவீர் - கர்த்தர் 4. காலமோ கடைசியாகி பாவம் பாரில் படர்ந்து பெருகி உலக வேஷம் கடந்து செல்லுதே வருகைத் தாமதிக்கையில் புறாவைப் போல் சிறகிருந்தால் பறந்து வந்து உம்மைக் காணுவேன் – கர்த்தர்

Wednesday 16 December 2020

Intru Kanda Egypthiyanai இன்று கண்ட எகிப்தியனை


 Intru Kanda Egypthiyanai

இன்று கண்ட எகிப்தியனை என்றுமே இனி காண்பதில்லை (2) இஸ்ரவேலைக் காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை (2) 1. கசந்த மாரா மதுரமாகும் வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2) கண்ணீரோடு நீ விதைத்தால் கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போது கண்ணீரை அவர் துடைத்திடுவார் (2) வெள்ளம் போல சத்துரு வந்தால் ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் காத்திடுவார் (2) பாதையிலே காக்கும்படிக்கு தூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர் சத்துவத்தை அளித்திடுவார் (2) கோரமான புயல் வந்தாலும் போதகத்தால் தேற்றிடுவார் (2)

Tuesday 15 December 2020

Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதி செய்


 Yesuvaiye Thuthi Sei

ஏசுவையே துதி செய் நீ மனமே ஏசுவையே துதி செய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முடிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

Monday 14 December 2020

Meetparin Satham மீட்பரின் சத்தம்


 Meetparin Satham

மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம் மேகத்தின் மீது வருவேன் என்றார் எக்காளம் முழங்கிடும் வேளையில் தான் தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார் 1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல் அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல் அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின் 2. உலக கவலை மதியீனத்தால் உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே உன்னதர் இயேசுவை நேசியாமல் உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின் 3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு இயேசு என்னும் நேசருண்டு உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்

Sunday 13 December 2020

Engum Pugal Yesu எங்கும் புகழ் இயேசு


 Engum Pugal Yesu

எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே உங்களையல்லவோஉண்மை வேதங் காக்கும் உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும் அதை அறிந்து துதி செய்குவீர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்--- எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும்பாதை தப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்--- எங்கும் 3. தாழ்மை சற்குணமும் தயைகாருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி பாழுந்துர்க்குணமும்பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ --- எங்கும் 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச்செல்ல தூதர் நீங்களே தூயன் வீரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்

Wednesday 9 December 2020

Kaanaga Paathai கானகப் பாதை


 Kaanaga Paathai

1. கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய் பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார் பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய் 2.எகிப்தின் பாவ வாழ்க்கை வெறுத்தே ஏசுவின் பின்னே நடந்தே தூய பஸ்கா நீ புசித்தே தேவ பெலனால் முன்செல்லுவாய் 3.கடலைப் பாரும் இரண்டாய்பிளக்கும் கூட்டமாய் சென்றே கடப்பாய் சத்ரு சேனை மூழ்கி மாளும் ஜெயம் சிறந்தே முன்செல்லுவாய் 4.கசந்த மாரா உன்னைக் கலக்கும் கஷ்டத்தால் உன் கண் சொரியும் பின் திரும்பிச் சோர்ந்திடாதே நன்மை அருள்வார் முன்செல்லுவாய் 5.கொடுமை யுத்தம் உன்னை மடக்கும் கோர யோர்தான் வந்தெதிர்க்கும் தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால் தூக்கிச் சுமப்பார் முன்செல்லுவாய் 6.புதுக்கனிகள் கானான் சிறப்பே பாலும் தேனும் ஓடிடுமே இந்தக் கானான் கால் மிதித்து சொந்தம் அடைய முன்செல்லுவாய்

Tuesday 8 December 2020

Unnathamaana Karthare உன்னதமான கர்த்தரே


 Unnathamaana Karthare

1. உன்னதமான கர்த்தரே இவ்வோய்வு நாளைத் தந்தீரே இதற்காய் உம்மைப் போற்றுவோம் சந்தோஷமாய் ஆராதிப்போம். 2. விஸ்தாரமான லோகத்தை படைத்த கர்த்தா எங்களை இந்நாள்வரைக்கும் தேவரீர் அன்பாய் விசாரித்து வந்தீர் 3. எல்லாரும் உமதாளுகை பேரன்பு ஞானம் வல்லமை மற்றெந்த மாட்சிமையையும் அறிந்து உணரச் செய்யும். 4. உயிர்த்தெழுந்த கிறிஸ்துவே நீர் எங்கள் ஆத்துமாவிலே தரித்து எந்த நன்மைக்கும் நீர் எங்களை உயிர்ப்பியும். 5. தெய்வாவியே நல் அறிவும் மெய் நம்பிக்கையும் நேசமும் சபையிலே மென்மேலுமே வளர்ந்து வரச் செய்யுமே.