Thursday, 20 February 2020

Inthap Paaril Aavin Veetil இந்தப் பாரில் ஆவின் வீட்டில்

இந்தப் பாரில் ஆவின் வீட்டில் இயேசு பாலன் பிறந்தாரே ஆடிப் பாடிடுவோம் அவர் பாதம் தொழுவோம் ஆண்டவர் இயேசுவை நாம் -- அல்லேலுயா 1. காட்டில் இல்லை மெத்தை இல்லை கந்தையதிலே விந்தையாக மண்ணில் மாந்தர் குல விளக்கே --- ஆடிப் 2. வானதூதர் வந்து நின்று வாழ்த்துப் பாடிட ஆயர்களோ ஓடி வந்து சேதி கேட்டிட --- ஆடிப் 3. வானில் வெள்ளி வழி காட்ட வந்த அறிஞர் வந்தனமும் வாழ்த்துக்களும் கூறி நின்றாரே --- ஆடிப் 4. எத்தனையோ மாளிகைகள் பாரிலிருந்தும் மாட்டுக் கொட்டில் தானே அவர் தெரிந்தெடுத்தார் --- ஆடிப்

Wednesday, 12 February 2020

Poorana Aaseer Polinthidume பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Polinthidume 1. பூரண ஆசீர் பொழிந்திடுமே பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே வானம் திறந்துமே வல்ல ஆவியே வந்திறங்கி வரமே தந்தருளுமே அன்பின் அருள் மாரியே வாருமே அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே 2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம் சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே 3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா 4.மா பரிசுத்த ஸ்தலமதிலே மாசில்லாத தூய சந்நிதியிலே வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக வல்லமை விளங்க துதி சாற்றுவோம் 5. குற்றங் குறைகள் மீறுதல்களும் முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும் இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே 6. மேகத்திலே நான் வந்திறங்குவேன் வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன் என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா இயேசுவே இறைவா வேகம் வாருமே

Monday, 10 February 2020

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது

Intha Kaalam Pollathathu இந்த காலம் பொல்லாதது உன்னைக் கர்த்தர் அழைக்கிறார் நீ வாழும் வாழ்க்கை தான் அது வாடகை வீடு தான் 1. உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன் என்று வாக்கு அளித்தவர் இன்னும் காத்து வருகிறார் --- இந்த 2. வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா சாத்தான் களத்தினில் போரிட ஜெய வீரனாய் திகழ வா --- இந்த 3. பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே சத்திய தேவனின் வார்த்தையோ நித்திய ஜீவனை அருளுமே --- இந்த 4. காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசுன்னை அழைக்கிறார் --- இந்த

Sunday, 9 February 2020

Narkarunai Naathane நற்கருணை நாதனே

Narkarunai Naathane நற்கருணை நாதனே சற்குருவே அருள்வாய் பொறுமை (2) 1. கோதுமை கனிமணி போல் தீ திலோர் குண நலன்கள் யோக்கியமாய் சேர்ந்திடவே தூயனே அருள் மழை பொழிவாய் (2) 2. திராட்சை கனி ரசமே தெய்வீக பானமதாம் பொருளினில் மாறுதல் போல் புவிக்கொரு புது முகம் நல்கிடுவார் (2) 3. சுவை மிகு தீங்கனியே திகட்டாத தேன் சுவையே தித்திக்கும் கிருபையினாலே எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2) 4. தேடி வந்தவரே தினம் உனதன்பாலே தாய் மனம் போல் அருளி தாரணி செழித்தோங்கிடவே (2)

Saturday, 8 February 2020

Yesuvai Thuthiungal Entrum இயேசுவை துதியுங்கள் என்றும்

Yesuvai Thuthiungal Entrum இயேசுவை துதியுங்கள் என்றும் இயேசுவை துதியுங்கள் (2) மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தை என்றென்றும் துதியுங்கள் (2) --- இயேசு 1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரே அன்பரை துதியுங்கள் (2) சர்வ வல்லமையும் பொருந்திய நமது இயேசுவை துதியுங்கள் (2) --- இயேசு 2. ஆவியின் அருளால் பாவி நமை சேர்த்த தலைவனை துதியுங்கள் (2) நீதி வழி நின்று நேர்மை வழி சென்ற நேயனை துதியுங்கள் (2) --- இயேசு 3. பாவியை ரட்சிக்க பூமியில் தோன்றிய பரமனைத் துதியுங்கள் (2) ஆசை கோபம் களவுகள் மறந்த கர்த்தனைத் துதியுங்கள் (2) --- இயேசு

Niyaaya Theerpu Naalana நியாய தீர்ப்பு நாளான

Niyaaya Theerpu Naalana நியாய தீர்ப்பு நாளான அந்த நாள் மகா பெரிய நாள் இந்த பூவிலுள்ளோர் அனைவரும் நடுங்கும் நாள் --- அந்த நாள் 1. நீதியும் அநீதியும் பிரிக்கப்படுமே அவரவர் ஜீவனும் ஆக்கினையும் அடைந்திடவே 2. சிறியவரும் பெரியவரும் ஏகமாய் நிற்க அங்கு தங்கள் தங்கள் கிரியைகளின் பங்கைப் பெற்றிட 3. வலது புறத்தில் நிற்போரேல்லாம் ஆசி பெற்றிட அன்று இடது புறத்தில் நிற்போரேல்லாம் சபிக்கவேப் பட 4. இம்மையிலே இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் திட்டம் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே

Thursday, 6 February 2020

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Immanuvelin Ratha Ootratho இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ என் பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ அல்லேலூயா பாரதோ கல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுது அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2) 1. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே 2. பாவியான கள்ளனும் மா ஊற்றில் மூழ்கினான் பாவ மன்னிப் பானந்தமும் கண்டு பூரித்தான் 3. ஆவியில் நிறைத்து தேவ சாயலாக்கினார் தூய ரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் 4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த ரத்தமே பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே