Inba Yesu Rajavai Naan
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும்
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும்
1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு
கறை திரை அற்ற பரிசுத்தரோடு
ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன்
2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்
3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன்
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன்
4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா
5. ஆஹா எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ
அப்பா என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே
Kanden Kalvariyin Katchi
கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்
1.பாவ உலகினிலே
ஜீவிக்கும் மானிடரே
பாரும் அவர் உனக்காய்
குருதி சிந்தும் காட்சி
2.கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
எனக்காய் சிந்தும் காட்சி
3.என் ஆத்ம நேசரே
என் இயேசு இன்பரே
என்றும் நான் உமக்காய்
நல் சேவை செய்திடுவேன்
Koodi Meetper Namathil
1. கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ இன்ப, இன்ப ஆலயம்
நல் மீட்பர் கிருபாசனம்
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்
2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் — ஆ இன்ப
3. சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் — ஆ இன்ப
4. வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் — ஆ இன்ப
Kaaviyam Padiduven
காவியம் பாடிடுவேன்
காலமும் வாழ்வினிலே
இயேசுவின் அன்பினையே
இறைமகன் இயேசுவின் அன்பினையே
இதயமெல்லாம் மகிழ்ந்திடவே
கீதம் பாடிடுவேன் (2) --- காவியம்
1. சொந்தம் பந்தம் எல்லாம்
வாழ்வில் மாறுமே
நெஞ்சில் வாழும் இயேசு
மாறா தெய்வமே (2)
அதை நினைப்பதினால் நன்றியுடன்
கீதம் பாடிடுவேன் (2)--- காவியம்
2. என்னை தேடி வந்தாய்
அன்பாய் தேவனே
என்றும் என்னை காக்கும்
தெய்வம் இயேசுவே (2)
அதை உள்ளத்திலே உணர்வதினால்
கீதம் பாடிடுவேன்( 2)--- காவியம்