Monday, 9 December 2019

Panivilum Ravinil பனிவிழும் ராவினில்

Panivilum Ravinil பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு பிறந்தாரே ராஜன் பிறந்தார் (2) நேசர் பிறந்தாரே (2) 1.மின்னிடும் வானக தாரகையே தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே பாலனைக் கண்டு பணிந்திடவே மகிழ்ந்தார் புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை --- பனி 2.மகிமையில் தோன்றிய தவமணியே மாட்சிமை தேவனின் கண்மணியே மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே மானிடனாக உதித்தவரே பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை --- பனி

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை

Thuthiyungal Devanai துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை - 2 1. அவரது அதிசயங்களை பாடி (2) அவர் நாமத்தை பாராட்டி அவரை ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் ஆப்ரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை (2) இடையூற்றினை போக்கினோனே கானானின் தேசத்தை காட்டினோனே கர்த்தரை போற்றுங்கள் ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் - துதியுங்கள்

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே

Thinam Thinam Nam Devanaiye தினம் தினம் நம் தேவனையே மனம் மகிழ்ந்து துதித்திடுவோம் (2) 1.இரக்கம் உருக்கம் நிறைந்தவரே மறவாமல் நம்மை காப்பவரே (2) சிறந்த நாமம் உடையவரே அரணான துணையாய் இருப்பவரே (2) - தினம் 2.அன்பின் உருவம் உடையவரே ஆண்டவர் அகிலத்தை சிருஷ்டித்தாரே (2) ஆறுதல் எல்லோருக்கும் தருபவரே அன்னையை போல அணைப்பவரே (2) - தினம் 3.விண்ணில் மகிமை உடையவரே மண்ணில் சமதானம் தருபவரே (2) என்னில் தினமும் வாழ்பவரே உன்னில் அழைத்தால் வருபவரே (2) - தினம்

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை

Pongi Valiyum Deva Kirubai பொங்கி வழியும் தேவ கிருபை மண்ணில் வந்தது இந்த மண்ணில் மறையும் மறைகள் காக்க தன்னை ஈந்தது 1. உலகை மீட்கும் உண்மை உருவே மாட்டுத் தொழுவில் பிறந்த திருவே உலகெல்லாம் போற்றிடும் தூய்மையின் அன்பின் உருவே — பொங்கி 2. கருவில் உதித்த தூய கனியே கவலை தீர்க்கும் கண்ணின் மணியே உள்ளமெல்லாம் பூரிக்கும் தூய்மையே உந்தன் வரவே — பொங்கி 3. விழிகள் திறந்த விந்தை தெய்வம் பழிகள் சுமந்த விந்தை தெய்வம் உலகெல்லாம் தொழுதிடும் உன்னதம் உந்தன் நாமம் — பொங்கி

Saturday, 7 December 2019

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி

Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம் மேய்ப்பர் வருகிறார் அல்லேலுயா பாடுவோம் மேய்ப்பரை வாழ்த்துவோம் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து வேதத்தின் ஓளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார் அல்லேலுயா பாடுவோம் தேவ மைந்தரை வாழ்த்துவோம்

Wednesday, 4 December 2019

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே

Santhosha Vinnoliye சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் 1.இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் 2.பூலோக மேன்மைகள் தேடாதவர் பேரும் புகழும் நாடாதவர் ஒன்றான மெய் தேவன் இயேசுவே என் ஆத்ம இரட்சகரே 3.ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர் தேவாதி தேவன் சுதன் இவர் இயேசுவல்லால் வேறு யாருமில்லை இரட்சண்யம் ஈந்திடவே 4.ஆடம்பர வாழ்வை வெறுத்தவர் அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர் எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும் இயேசுவைப் பின்பற்றுவோம் 5.எங்கள் சமாதானப் பிரபு இவர் இயேசு அதிசயமானவர் வேதம் நிறைவேறும் காலமே வேகம் வருகின்றாரே

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidanai Piranthar இயேசு மானிடனாய் பிறந்தார் இந்த லோகத்தை மீட்டிடவே இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார் இந்த நற்செய்தி சாற்றிடுவோம் 1.மேய்ப்பர்கள் இராவினிலே தங்கள் மந்தையைக் காத்திருக்க தூதர்கள் வானத்திலே தோன்றி தேவனைத் துதித்தனரே--- இயேசு 2.ஆலோசனை கர்த்தரே இவர் அற்புதமானவரே விண் சமாதான பிரபு சர்வ வல்லவர் பிறந்தனரே --- இயேசு 3.மாட்டுத் தொழுவத்திலே பரன் முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம் அவர் ஏழ்மையின் பாதையிலே --- இயேசு 4.பொன், பொருள், தூபவர்க்கம் வெள்ளைப் போளமும் காணிக்கையே சாட்சியாய் கொண்டு சென்றே – வான சாஸ்திரிகள் பணிந்தனரே --- இயேசு 5.அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே --- இயேசு 6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம் இவர் வாக்கு மாறாதவரே கண்ணிமை நேரத்திலே நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் --- இயேசு