Monday, 25 November 2019

Yorthan Nathiyoram Thigaiyaathe யோர்தான் நதியோரம் திகையாதே

Yorthan Nathiyoram Thigaiyaathe
யோர்தான் நதியோரம் திகையாதே மனமே
யோசனை யாலுன்னைக் கலக்காதே உள்ளமே

1.வெள்ளம் பெருகினும் வல்லமைக் குன்றாதே
வல்லவர் வாக்கென்றும் மாறிப் போகாதே    - யோர்

2.வைப்பாயுன் காலடி தற்பரன் சொற்படி
வானவர் இயேசு தம் வாக்கு மாறாரே            - யோர்

3.உன்னத மன்னனே உண்டு முன்னணியில்
துன்பமணுகாமல் துணையருள்வாரே            - யோர்

4.கானானினோரமே காதலின் நாடதே
காணுவேன் தேசம் ஆ என்ன இன்பமே        - யோர்

5.பால்தேனு மோடுதே பூரண அன்பதே
பாட்டினாலே அதைப் பகரலாகாதே            - யோர்

6.ஜெபத்தினால் வல்லமை ஜெயம் பெற்றோர் நாடதே
ஜோதியின் வஸ்திரம்  தரித்திடலாமே            - யோர்

Sathiyamum Jeevanumai Nithamume சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Sathiyamum Jeevanumai Nithamume
1.சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கு கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

வானந்திறந்தருளும் பல தானங்களையிந் நேரமதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குரு நாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

2.என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனூற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனேயும் நல்வரங்கள் ஈந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணி போல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே        - வானந்

3.சுய ஆடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மையினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதைப் பேணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே        - வானந்

4.அதிகமதிக அன்பில் அமிழ்ந்து அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்தும்மைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமயமுன்னத பெலனீந்திடும்            - வானந்

Pirasannam Tharum Devane பிரசன்னம் தாரும் தேவனே

Pirasannam Tharum Devane
பிரசன்னம் தாரும் தேவனே
உந்தன் சமூகம் தாருமே
இயேசுவே உந்தன் நாமத்தில்
இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2
பிரசன்னம் தாரும் தேவனே

1. பக்தர்கள் போற்றும் நாதா
பரிசுத்த தேவன் நீரே
கேருபீன் சேராபீன் துதி பாடிடும்
பரனே நின் பாதம் பணிகின்றோம்

2. நீரல்லால் இந்த பாரில்
தஞ்சம் வேறாருமில்லை
உந்தனின் சமூகத்தில் இளைப்பாறிட
சந்ததம் உம் அருள் ஈந்திடுமே

3. நல்மேய்ப்பர் இயேசு தேவா
துன்பங்கள் நீக்கிடுமே
ஆதி அன்பு என்னில் குன்றிடாமல்
நிலைக்க நல் அருள் ஈந்திடுமே

4. தேவா உந்தன் சமூகம்
முன் செல்ல வேண்டுகிறேன்
பேரின்பம் எந்நாளும் பொங்கிடவே
உம்மில் மகிழ்ந்து நான் ஆனந்திப்பேன்

5. வானத்தில் தோன்றும் நாளில்
உம்மைப் போல் மாறிடவே
ஆவி ஆத்மா தேகம் மாசற்றதாய்
காத்திட கர்த்தரே கெஞ்சுகிறேன்

Thuthi Thuthi En Maname துதி துதி என் மனமே

Thuthi Thuthi En Maname
துதி துதி என் மனமே
துதிகட்குள் வசிப்பவரை --  எல்லா
நாட்களும் செய்திடும் நன்மைகளை நினைத்து
நன்றியுடன் பாடு மனமே  அல்லேலூயா  (2) --- துதி

1.அன்னையை போல அவர்
என்னை அரவணைத் தாற்றிடுவார்
அவர் அன்புள்ள மார்பதனில்
நான் இன்பமாக இளைப்பாறுவேன் (2) --- துதி

2.கஷ்டங்கள் வந்திடவே
நல்ல கர்த்தராம் துணை அவரே
துஷ்ட எதிரிகள் நடுவிலவர்
நல்ல பந்தி ஆயத்தம் செய்வார் (2)  --- துதி

3.பாரங்கள் அமிழ்த்தினாலும்
தீரா வியாதியால் கலங்கினாலும்
அவர் காயத்தின் தழும்புகளால்
வியாதி தனை விலக்கிடுவார் (2) --- துதி

4.சகாய பர்வதமே
வல்ல கோட்டையும் அரணுமாமே
ஏதும் பயமொன்றும் வேண்டாமென்றால்
எந்த சேதமின்றி காக்கவல்லோன்(2)  --- துதி

 5.சிங்கமோ விரியன் பாம்போ
பால சிங்கமோ வலு சர்ப்பமோ
அதன் தலையதை நசுக்கிடவே
தக்க பலம் தருபவரே (2)--- துதி

Friday, 22 November 2019

Unnatha Thevanuke Magimai உன்னத தேவனுக்கே மகிமை

Unnatha Thevanuke Magimai
1.உன்னத தேவனுக்கே மகிமை
உலகில் சமாதானமாமே
காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
பேரொளியாய் ஜெனித்தார்

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா துதியவர்க்கே

2.மானிடர் மேல் இவர்க் கன்பிதுவோ
மனுக்கோலமாய் மனுவேலனார்
மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
மாணொளியாய் ஜெனித்தார்

3.தாரகை என அவர் தோன்றிடவே
நேர் பாதையில் நடத்திடவே
தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
தன் ஒளியாய் ஜெனித்தார்

4.வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
வல்ல தேவனின் ஏக சுதன்
வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
வானொளியாய் ஜெனித்தார்

5.தாவீதின் வேர் இவராய் அவனின்
ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
தாம் உதித்தார் ஒளியாய்

Wednesday, 20 November 2019

Poorana Aaseer Polinthidume பூரண ஆசீர் பொழிந்திடுமே

Poorana Aaseer Polinthidume
1. பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2. ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3. தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5. குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6. மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Tuesday, 19 November 2019

Maalayil Thuthipom Magilvudanae மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே

மாலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக் களிப்புடனே
மாண்புகழ் இயேசுவை  வானவரோடே

1.காலை மாலை உறங்காரே நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே – மாலை

2.கிருபையின் வாக்கு தந்தாரே – அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரே – மாலை

3.சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரே – மாலை

4.அழைத்த மெய் அழைப்பிலே தானே – நாம்
உழைத்திட பெலன் தந்ததேனே
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே – மாலை

5.வயல் நிலம் ஏராளம் காட்டி – அதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே – மாலை

6.ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் ஏசுவின் நாமத்தைத்தானே – மாலை

7. ஆயிரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப் போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் – மாலை

8. உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே – மாலை