Sunday, 17 November 2019

What a friend we have in Jesus

What a friend we have in Jesus
All our sins and  griefs to bear
What a privilege to carry
Everything to God in prayer
Oh, what peace we often forfeit
Oh, what needless pain we bear
All because we do not carry
Everything to God in prayer

Have we trials and temptations
Is there trouble any where
We should never be discouraged
Take it to the Lord in prayer.
Can we find a friend so faithful
Who will all our sorrows share
Jesus knows our every weakness
Take it to the Lord in prayer

Are we weak and heavy laden
Cumbered with a load of care
Precious Savior, still our refuge
Take it to the Lord in prayer
Do your friends despise, forsake you
Take it to the Lord in prayer
In his arms he’ll take and shield you
You will find a solace there.

Yesuve Neer Nalla Nanpar யேசுவே நீர் நல்ல நண்பர்

Yesuve Neer Nalla Nanpar
1.யேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் கேட்கிறீர்
உந்தன் ஆவல் உணராமல்
சாந்தி முற்றும் இழந்தோம்
உந்தன் மீது வைத்திடாமல்
நோவு முற்றும் சுமந்தோம்

2. சோதனை போராட்டம் மிஞ்சித்
துன்பம் மூடும் வேளையில்
அஞ்சிடாதே யேசு  நோக்கிக்
கெஞ்சி வேண்டிக் கொள்ளவே
உந்தன் துக்கம் தாங்கிக் கொள்ள
நண்பர் மீட்பரல்லவோ
உந்தன் சோர்பெல்லா மறிந்த
யேசுவண்டை  ஓடி வா

3. பாரம் பொங்கிச் சோர்பு மிஞ்சி
ஆழ்த்தும் வேளை ஓடி வா
பாதுகாவல் யேசு தானே
வேறே தஞ்சமில்லையே
நண்பர் எல்லாம் கைவிட்டாலும் 
யேசு சேர்த்துக் கொள்வாரே
மார்போடுன்னைச் சேர்த்தணைத்து
விண்ணில் வாழச் செய்குவார்

Kaalai Thorum Karthane Puthu காலை தோறும் கர்த்தனேபுது

Kalai Thorum Karthane Puthu
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே

நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனக்கானந்தமே  (2)   --- காலை

1. ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே --- காலை

2. ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மனதில் மறுரூபமாகிடுவேன் --- காலை

3. சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் புகழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் --- காலை

4. கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் --- காலை

5. ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர் --- காலை

Friday, 15 November 2019

Kartharai Padiye Potriduvomae கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே

Kartharai Padiye Potriduvomae
கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
கருத்துடன் துதிப்போம் இனியநாமமதை
கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
கரையில்லை அவரன்பு கரையற்றதே

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
இயேசுவைபோல் வேறு நேசரில்லையே

1.கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
அடிக்கையில் மோதியே மதில்களின்  மீதே
பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
வெயிலுக்கு ஒதுங்கும் விண் நிழலுமானார்

2.போரட்டம் சோதனை நிந்தை அவமானம்
கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
ஜீவித்து சேவிக்க திடமளித்தார்

3.கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
எல்லையில்லா எதிர் எமக்கு வந்தாலும்
வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்

4.சீயோனில் சிறப்புடன் சேர்த்திட இயேசு
சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
முகமுகமாகவே காண்போமே அவரை
யுகயுகமாகவே வாழ்ந்திடுவோம்

Namathu Yesu Kiristhuvin Namam நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

Namathu Yesu Kiristhuvin Namam
1.நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம் 

2 அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்  --- தேவ

3 பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ

4 பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார்     --- தேவ                                                                                                               

5 நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
 உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் --- தேவ
 
6.பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்   --- தேவ

Thursday, 14 November 2019

En Aathuma Nesa Meipare என் ஆத்தும நேச மேய்ப்பரே

En Aathuma Nesa Meipare
1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ  காட்டும் செய்ய ஆயத்தம் – 2

2. மெய்  மீட்பரைக் கீழ்ப்படிவோர்
தன் ஆத்மத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்  --- பேசும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி அன்பால் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்  --- பேசும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையே செல்லுவேன்
ஆசித்துத் தாறேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் --- பேசும்

Thuthipaen Thuthipaen Thuthipaen துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

Thuthipaen Thuthipaen Thuthipaen
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளவும் துதிப்பேன்
துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்

1.பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

2.நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

3.வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இயேசுவைத் துதிப்பேன்