Wednesday, 13 November 2019

Potriduvom Pugalnthiduvom போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்

Potriduvom Pugalnthiduvom
போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே (2)

1.தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெமைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நான் துதித்திடுவோம் – போற்றிடுவோம்

2. கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியின் சோதனையில்
கலங்கிடுமோ எம் விசுவாசமே – போற்றிடுவோம்

3.ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இணைத்தனரே நம்மைத் தன் சுதராய் – போற்றிடுவோம்

4.ஆதி அப்போஸ்தல தூதுகளால்
அடியாரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின்  நற்கந்தமாக்கினாரே – போற்றிடுவோம்

5.சீயோனே மாசாலேம் நகரே
சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தில் – போற்றிடுவோம்

Tuesday, 12 November 2019

Yesuvin Namathil Naam இயேசுவின் நாமத்தில் நாம்

Yesuvin Namathil Naam
இயேசுவின் நாமத்தில் நாம்
கூடிடும் சமயங்களில்
பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க

1.மலைகள் விலகினாலும்
மாபர்வதம் நிலைபெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபைகள்
தம் மக்களுக்காறுதலே  --- இயேசுவின்

2.சீயோனில் அவர் நம்மையே
சிறுமந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால்  --- இயேசுவின்

3.கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக்கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால்   --- இயேசுவின்

Aanantha Padalgal Padiduven ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Aanantha Padalgal Padiduven
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே – ஆனந்த

1.மேலாக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் – ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசு நாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரதில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே --- ஆனந்த

3. கானானின் கரையிதோ காண்கின்றதே எந்தன்
காதலன் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக ஓட்டத்தை முடித்திடுவோம் – ஆனந்த

4. அற்புதமாம் அவர் நேசமது எந்தன்
பொற்பரன் சேவையென் சோகமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை
கற்புடன் அவர் பணி செய்திடவே --- ஆனந்த

5.அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவோம் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் – ஆனந்த

6. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் – ஆனந்த

Monday, 11 November 2019

Thevanin Aalayame தேவனின் ஆலயமே

Thevanin Aalayame 
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்

2.நாம் இனி நம்முடையவர்களல்ல
அவரே சரீரத்தின் சொந்தமானவர்
வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்
பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக

3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
ஆவியினாலும் சரீரத்தினாலும்
மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
அவரின் பிரசன்னம் விரைந்திடுதே
மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே நாம்
 மறுரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம்

Sunday, 10 November 2019

Yesu Devanai Thuthithiduvom இயேசு தேவனை துதித்திடுவோம்

Yesu Devanai Thuthithiduvom
இயேசு தேவனை துதித்திடுவோம்
இயேசு ராஜனை வாழ்த்திடுவோம்
இதயம் பொங்க நன்றியுடனே
போற்றி உயர்த்தி பணிந்திடுவோம்

1. வார்த்தை வடிவாய் வந்தவரை
    வாதை பிணியைத் தீர்த்தவரை
    கண்ணின் மணி போல் காத்த தயவை
   கருணை உருவைத் துதித்திடுவோம்

2. அடிமை ரூபம் எடுத்தவரை
    அகிலம் பணிந்திட செய்தவரை
   உயர்ந்த நாமம் பெற்று விளங்கும்
   உன்னதர் அவரைப் போற்றிடுவோம்

3. இருளை நீக்கும் மா ஜோதியாய்
    உலகில் வந்த அருள் வடிவே
    ஜீவ ஒளியாய் திகழும் அவரை
   இன்றும் என்றும்   துதித்திடுவோம்

4. தேவ தன்மையை வெளிப்படுத்த
    தேவ மைந்தனாய் வந்தவரை 
    தேவ சுதராய்  நாமும் விளங்க
    கிருபை உருவைத் துதித்திடுவோம்

5. பாவ சாப மரணமதை
    ஜெயித்து வென்று எழுந்தவரை
    மகிமை சூழ திரும்பி வந்திடும்
    வேந்தன் அவரைத் துதித்திடுவோம்
 

Friday, 8 November 2019

Kirubai Irakkam Nirainthavor கிருபை இரக்கம் நிறைந்தவோர்


1. கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் எங்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே

கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால் பொங்கி வழியுதே
என்ன என் பாக்கியமிதே

2. நம்மைப் போலவே சோதிக்கப் பட்டும்
நாதனோர் பாவமுமற்றவராய்
நாளும் நம் குறைகள் கண்டுருகும்
நல்ல ஆசாரியர் நமக்குண்டே

3. நம் பெலவீனத்தில் அவர் பெலன்
நல்கிடுவார் பரிபூரணமாய்
நாடுவோமே மாறா கிருபையை
நமக்காகவே அவர் ஜீவிப்பதால்

4. வானங்களின் வழியாய்ப் பரத்தில்
தானே சென்று இயேசுவா மெமது
மா பிரதான ஆசாரியரைப்
பற்றிடுவோம் நோக்கி நம்பிக்கையை

5. பிதாவண்டை சேரும் சுத்தர் கட்காய்
சதாபரிந்து பேசியே நிற்போர்
இதோ எம்மையே முற்று முடிய
இரட்சிக்க வல்லமையுள்ளவரே

Potruvomae Potruvomae போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே (2) போற்றுவோமே

1.துங்கன் இயேசுவே துயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்து போற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிடவேணும் --- போற்றுவோமே

2.ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதனிலெம் பாவ மெறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் இன்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மனதினிலே --- போற்றுவோமே

3.பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே
சுத்திகரித்த துய வேந்தனே
துயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே --- போற்றுவோமே

4.பாரிலென்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரி சனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க --- போற்றுவோமே

5.பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திடக்
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
 கானம் பாடியே துதித்திடுவேன் --- போற்றுவோமே