Friday, 4 October 2019

O Yesu Umathanbu ஓ இயேசு உமதன்பு

O Yesu Umathanbu
ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது
ஆகாயம் பூமி மலை ஆழிகளுக்கெல்லாம் பெரியது

1 அளவில்லா ஆனந்தத்தால் அகம் நிறைந்தது
ஆண்டவர் காரியங்கள் அதிகம் சிறந்தது
அன்றாடம் காலை மாலைகளிலும் துதிக்க உயர்ந்தது
துதிக்க உயர்ந்தது   --- ஓ இயேசு

2 சங்கட சமயங்களில் மங்கியே வாடுகிறேன்
துங்கனே இரங்குமென ஏங்கியே நாடுகிறேன்
பங்கமில்லாமல் பதிலளிப்பேன் என்றதால் பாடுகிறேன்
என்றதால் பாடுகிறேன்   --- ஓ இயேசு

3 இருளாம் பள்ளத்தாக்கில் மருகியே நடந்தாலும்
அருமெந்தன் மேய்ப்பராய் அருகிலிருப்பதாலும்
கருணையா யென்னைக் கரம் பிடித்தே கர்த்தரே காப்பதாலும்
கர்த்தரே காப்பதாலும்   --- ஓ இயேசு

4 குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கிறீர்
நிறைவாம் புல் தரையில் மெதுவாக நடத்துகிறீர்
இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும் திருப்தியாக்குகிறீர்
திருப்தியாக்குகிறீர்   --- ஓ இயேசு

Yesuvin Ninthaiyai Sumapom இயேசுவின் நிந்தையைச் சுமப்போம்

Yesuvin Ninthaiyai Sumapom
இயேசுவின் நிந்தையைச்  சுமப்போம் 
வாசலுக்கு புறம்பே போவோம்

1. சன்பல்லாத்  தொபியா சக்கந்தங்களையும்
துன்புறுத்தும் தீயர் கேள்விகளையும்
அன்பருடனே இன்பமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

2. ஸ்தேவான் மேல் விழுந்த கற்களை நினைத்து
சீஷர்கள் அடைந்த சிறைகளை சிந்தித்து
மோசங்களென்றாலும் நேசமாய் ஏற்போம்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

3. கள்ளச் சகோதரர் கைவிடுவார்கள்
சொல்லாதவைகளை சுமத்திடுவார்கள்
நல்ல கிறிஸ்தேசுவை மறுதலிப்பார்கள்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

4. கோலால் கொடுமையாய் அடிக்கப்பட்டாலும்
வாளால் துண்டாக வகுக்கப்பட்டாலும்
நாளெல்லாம் நரரால் நசுக்கப்பட்டாலும்
புறப்பட்டுப்போகக்  கடவோம்  --- இயேசுவின்

5. அமர்ந்திருந்து அவர் கர்த்தரென்றறியுங்கள்
நடந்திடும் யுத்தம் நாதனுடையதே
ஸ்தோத்திரப்  பலியை  நேர்த்தியாய் செலுத்தி
அல்லேலுயா பாடக்கடவோம்  --- இயேசுவின்

Salemin Raja சாலேமின் ராசா

Salemin Raja
1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன்  (2) – இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்  --- சாலேமின் ராசா

2. சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே – இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?  --- சாலேமின் ராசா

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே   --- சாலேமின் ராசா

4. நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; – இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே   --- சாலேமின் ராசா

5. சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; – உந்தன்
சாட்சிகளுடைய  இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே    --- சாலேமின் ராசா

Thursday, 3 October 2019

Naarpathu Naal Raapagal நாற்பது நாள் ராப் பகல்

Naarpathu Naal Raapagal 
1. நாற்பது நாள் ராப் பகல்
வனவாசம் பண்ணினீர்;
நாற்பது நாள் ராப் பகல்
சோதிக்கப்பட்டும் வென்றீர்.

2. ஏற்றீர் வெயில் குளிரை
காட்டு மிருகத் துணை;
மஞ்சம் உமக்குத் தரை,
கல் உமக்குப் பஞ்சணை.

3. உம்மைப்போல நாங்களும்
லோகத்தை வெறுக்கவும்,
உபவாசம் பண்ணவும்
ஜெபிக்கவும் கற்பியும்.

4. சாத்தான் சீறி எதிர்க்கும்
போதெம் தேகம் ஆவியை
சோர்ந்திடாமல் காத்திடும்,
வென்றீரே நீர் அவனை.

5. அப்போதெங்கள் ஆவிக்கும்
மா சமாதானம் உண்டாம்;
தூதர் கூட்டம் சேவிக்கும்
பாக்கியவான்கள் ஆகுவோம்.

Ellam Yesuve எல்லாம் இயேசுவே

 Ellam Yesuve
எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே
தொல்லைமிகு மிவ்வுலகில் துணை யேசுவே

ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும்

தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும்

கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும்

போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும்

அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்

ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென்  காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்

Wednesday, 2 October 2019

Rojapoo Vasamalargal Nam ரோஜாப்பூ வாசமலர்கள் நாம்

Rojapoo Vasamalargal Nam
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ…
நேசமணாளன் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Thammandai Vantha Palarai தம்மண்டை வந்த பாலரை

Thammandai Vantha Palarai
1. தம்மண்டை வந்த பாலரை
ஆசீர்வதித்த ரட்சகர்,
இப்போதும் சிறுவர்களை
அணைக்கத் தயையுள்ளவர்.

2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
அணைத்து ஏந்தியருளும்
அளவில்லாசீர்வாதத்தை
அன்பாகத் தந்திரட்சியும்.

3. குழந்தைகளுக் காகவும்
மரித்துயிர்த்த   ஆண்டவர்
சிறந்த நன்மை வரமும்
தரக்  காருண்ய முள்ளவர்