Wednesday, 2 October 2019

Nam Naduvathu Oru Puthu Ulagam நாம் நாடுவது ஒரு புது உலகம்

Nam Naduvathu Oru Puthu Ulagam
நாம் நாடுவது ஒரு புது உலகம்
அதை ஆளுவது  நம் இயேசு ராஜன்

1. வானில் எக்காளமதின் தொனி  முழங்கிடவே
என்னை அழைத்துச் செல்ல  அவர் வருவாரே
சிறையுற்றோர் மீட்படைவார்
சிறியோரும் பெரியோரும்  பணிந்திடுவார்  --- நாம் நாடுவது

2. விதை விதைப்பதில்லை  வயல் அறுப்பதில்லை
வீடு கட்டுவோரில்லை அந்த நாட்டினிலே
வாகனங்கள் நீதிமன்றம் கடைத் தெரு  யாவுமே
அங்கு இல்லையே  --- நாம் நாடுவது

3. மெய்  தேவன் அவரே ஒளி வீசிடுவார்
பரிசுத்தர் எனவே தூதர் வாழ்த்திடுவார்
இராஜாதி  ராஜாவுடன் என்றென்றும்
வாழ்ந்திடலாம்  அல்லேலூயா --- நாம் நாடுவது

Unnai Alaikum Yesuvin உன்னை அழைக்கும் இயேசுவின்

Unnai Alaikum Yesuvin
உன்னை அழைக்கும் இயேசுவின்
சத்தத்தை நீ கேளாயோ
உன்னை தேடி வரும் இயேசுவை
உள்ளத்தில் ஏற்றுக்  கொள்ளாயோ -(2)

1.உன் பாவ பாரமெல்லாம்
தன் தோளில் சுமந்தாரே
அவர் பட்ட காயம் நீ செய்த பாவம்
ஆனாலும் அழைக்கின்றார் வா -(2)  --- உன்னை

2.ஐங்காயம் அடைந்தாரே
சிலுவையில் மரித்தாரே
அவர் பட்ட பாடு உனக்காக தானே
உள்ளம் கலங்காதே வா -(2)   --- உன்னை

3.உன்னைப் பேர் சொல்லி அழைத்தாரே
இரத்தத்தால் மீட்டுக் கொண்டாரே
கரங்களை நீட்டி அன்போடு உன்னை
அழைக்கிறார்  இப்போதே வா  (2) --- உன்னை

Tuesday, 1 October 2019

Mahimaiyaai Vetri Sirantha Kartharai மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை

Mahimaiyaai Vetri Sirantha Kartharai
மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை
மகிழ்ந்து பாடிடுவேன் (2)

1.கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் கீதமுமானார்
கரம்பிடித்து என் இரட்சிப்புமானார்  - மகிமை

2.அமிழ்ந்தது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே    - மகிமை

3.பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக்கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில்   - மகிமை

4.கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத்தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன்   - மகிமை

5.தம்புரு நடனத்தோடே பாடுவேன்
தீர்க்கத்தரிசி மீரியாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன்   - மகிமை

Kalvari Mamalai Mel கல்வாரி மா மலைமேல்

Kalvari Mamalai Mel
1.கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால்
கடாவப்பட்டவராய் கர்த்தர் இயேசு  தொங்கக் கண்டேன்
குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும்
குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை (2)

2.அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால்
நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு
எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே
ஈனக்கோல மடைந்தேன் உன்னை ரட்சித்தேன் என்றார் (2)

3.கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி
பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை
என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே
சந்தேகம் மாறியதே சந்தோசம் பொங்கியதே (2)

Kalgal Koopidum கல்கள் கூப்பிடும்

Kalgal Koopidum
கல்கள் கூப்பிடும் நீ பேசாவிட்டால் .. இந்த
கல்கள் கூப்பிடும் நீ பாடாவிட்டால்
       
1. ஆபிரகாமின் புத்திரர் என்போர் ஆண்டவரை மறந்துவிட்டால்
கல்களால் தம் பிள்ளைகளாக்க வல்லவர் உண்டு தெரியுமா!
       
2. வேதம் கற்று போதிப்போரும் சத்தியத்தைக் கடைபிடித்தால்
ஆயக்காரர் பாவிகளும் பரலோகில் இடம் பெறுவாரே!
       
3. இராஜ்ஜியத்தின் புத்திரர் என்போர் அழைப்பை அசட்டை பண்ணிவிட்டால்
வேலியருகே உள்ள மனிதர் கலியாண சாலை நிரப்புவார்!

Inba Yesu Rajavai Naan இன்ப இயேசு ராஜாவை நான்

Inba Yesu Rajavai Naan
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு (2)
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முள் கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து (2)
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா(2)
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ (2)
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

Yesu Nesikirar இயேசு நேசிக்கிறார்

Yesu Nesikirar
இயேசு நேசிக்கிறார்  – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
                                    சரணங்கள்

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார் — இயேசு

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம் — இயேசு

3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் — இயேசு

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
ஆவலாய்ப் பரப்பேன் — இயேசு

5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
இணையில் கீதஞ் சொல்வேன் — இயேசு