Friday, 13 September 2019

Deva Aaseervaatham Perykiduthey தேவ ஆசீர்வதம் பெருகிடுதே



Deva Aaseervaatham Perykiduthey
தேவ ஆசீர்வதம் பெருகிடுதே
துதிகள் நடுவே கர்த்தர் தங்க
தூதர் சேனை தம் மகிமையோடிறங்க

1. நலமுடன் நம்மை இதுவரையும்
நிலைநிறுத்திடுதே அவர் கிருபை
கண்மணிபோல் கடைசிவரை
காத்திடும் பரமனை வாழ்த்திடுவோம்

2. குறித்திடும் வேளை உயர்த்திடுவார்
கிறிஸ்துவின் கரத்தில் அடங்கிடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தவரை
வாழ்வினில் துதித்திட வாய் திறப்போம்

3. பொருந்தொனி கேட்க ஏறிடுவோம்
பரலோகந் திறந்தே அவர் வருவார்
உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில்
என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம்

Kuyavane Kuyavane Padaippin குயவனே குயவனே படைப்பின்



Kuyavane Kuyavane Padaippin
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே

2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம் கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே

3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம் பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே

Kaathu kulira Padungal காது குளிர பாடுங்கள்



Kaathu kulira Padungal
1. காது குளிர பாடுங்கள்  கிருபா சத்தியம்
புத்தி தெளியக் காட்டுங்கள்  திவ்விய வசனம்
வெல்க ! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம்
   
 அமிர்தமே! அற்புதமே!  திவ்விய  சத்தியம்
     அமிர்தமே! அற்புதமே!  திவ்விய  சத்தியம்

2. நல்ல செய்தியைக் கூறுமேன் கிருபா சத்தியம்
பாவ நாசத்தைக் காட்டுமேன் திவ்விய வசனம்
வான வருஷமாரி ஞான பொக்கிஷவாரி   --- அமிர்தமே

3. வேத நாயகர் பொழியும் கிருபா சத்தியம்
ஜீவ மங்கல மொழியும்  திவ்விய வசனம்
யேசு! எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக் காரும்  --- அமிர்தமே

Anbil Ennai Parisuthanaaka அன்பில் என்னை பரிசுத்தனாக்க




Anbil Ennai Parisuthanaaka 
1. அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ

என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் (2)

2. மரித்தோரில் முதல் எழுந்ததினால்
புது சிருஷ்டியின் தலையானீரே
சபையாம் உம் சரீரம் சீர் பொருந்திடவே
ஈவாய் அளித்தீர் அப்போஸ்தலரை – என்

3. முன்னறிந்தே என்னை அழைத்தீரே
முதற்பேராய் நீர் இருக்க
ஆவியால் அபிஷேகித்தீர் என்னையுமே
உம் சாயலில் நான் வளர – என்

4. வருங்காலங்களில் முதற்பேராய்
நீர் இருக்க நாம் சோதரராய்
உம் கிருபையின் வார்த்தையை வெளிப்படுத்தி
ஆளுவோம் புது சிருஷ்டியிலே – என்

5. நன்றியால் என் உள்ளம் நிறைந்திடுதே
நான் எப்படி பதில் செய்குவேன்
உம்மகா நோக்கம் முற்றுமாய் நிறைவேறிட
என்னை தந்தேன் நடத்திடுமே – என்

Jebathai Ketkum Engal Deva ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா





Jebathai Ketkum Engal Deva 
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம் 

ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்  --- ஜெபமே ஜீவன்

ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்   --- ஜெபமே ஜீவன்

இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம்   --- ஜெபமே ஜீவன்

Wednesday, 11 September 2019

Karthane Em Thunaiyaaneer கர்த்தனே எம் துணையானீர்

Karthane Em Thunaiyaaneer
கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்

1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கல மாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே

2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா உம் அன்பு எனைக் கண்டது
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப் பாடக்கூடுமோ (2)
ஜீவனே உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை – கர்த்தனே

Adaikalame Umathadimai Naane அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naane
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம்  நித்தம் நான் நினைப்பேனே

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

3. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

4. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை